நல்லாசிரியை செய்த கெட்ட காரியம்..

நல்லாசிரியை செய்த கெட்ட காரியம்..

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சாண்டியாகோ நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நல்லாசிரியர் எனப் போற்றப்பட்டு கௌரவிக்கப்பட்ட ஒரு ஆசிரியை இரு பள்ளிச் சிறுவர்களை தன் வசப்படுத்தி அவர்களை தன் பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட குற்றத்தின் பேரில் முப்பது ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார்.
முப்பத்தாறு வயதான ஜாக்குலின் மா என்ற அந்த பெண் ஆசிரியை லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருந்தபோது தன்னிடம் பயின்ற பன்னிரெண்டு வயது மாணவன் ஒருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் பேரில் விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.
மேற்படி மாணவனின் சமுக வலைத்தளப் பக்கத்தை தற்செயலாக பார்த்த மாணவனின் தாய், அதில் குறிப்பிட்ட ஆசிரியை அனுப்பிய காதல் ரசம் சொட்டும் குறுஞ்செய்திகளைக் கண்ட பின்னரே ஆசிரியை குறித்த புகாரை பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்ப, நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.
விசாரணையில் குறிப்பிட்ட மாணவனிடம் அன்பு காட்டுவது போல பேசிய ஆசிரியை அவனுக்கு பரிசுகளும் தின்பண்டங்களும் தந்து அவனை தன் வசப்படுத்தியதாகவும்,பின்னர் சில மாதங்களாக சிறுவனுடன் உறவில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தான் இன்னும் இரு மாணவர்களிடமும் இதே போன்று பாலியல் ரீதியாக நடந்து கொண்டதையும் காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டார் ஆசிரியை ஜாக்குலின்.
நீதிமன்றத்தில் தன் குற்றங்களை கண்ணீருடன் ஒப்புக்கொண்ட ஜாக்குலின் தான் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் தான் நடந்து கொண்ட விதத்திற்காக மிகவும் வெட்கப்படுவதாகவும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை தான் பயன்படுத்தி அவர்களின் குழந்தைத் தனத்தை பாழ்படுத்தி விட்டதாகவும் கண்ணீருடன் கூறினார். மேலும் அவர் குழந்தைகளின் பெற்றோரிடமும் சமுகத்திடமும் மன்னிப்பு கோருவதாவும் கதறி அழுதார்.
தற்போது சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிருபிக்கப்பட்ட நிலையில் ஆசிரியை ஜாக்குலினுக்கு 30 ஆண்டுகால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Trending Articles