இன்று இடம்பெயரும் பறவைகள் தினம்

thumb_upLike
commentComments
shareShare

இன்று இடம்பெயரும் பறவைகள் தினம்

“ஆகாய விமானங்களை விட என்னை பறவைகளே அதிகம் பிரமிக்க வைக்கின்றன”- சார்லஸ் லின்பர்க்
“நான் எல்லாருக்கும் ஒரு அந்நியனைப் போலவே இருப்பதாக உணர்கிறேன், அமெரிக்கப் பறவைகளைத் தவிர..!”- ஜான் ஜேம்ஸ் ஆதுபன்.
உலகெங்கும் வாழும் பறவைகளுக்கு நிஜமாகவே வானமே எல்லை. காலத்தை உணர்ந்து, நாளைக் குறித்து, கூட்டமாகச் சேர்ந்து, தலைமையை மதித்து, ஒழுங்கை கடைபிடித்து, பேச்சு இல்லாமல், குழப்பம் இல்லாமல், பருவம் தப்பாமல், வழியை மறக்காமல், கூட்டம் கூட்டமாக கிளம்பி, வருடந்தோறும் குறிப்பிட்ட இடங்களில் இளைப்பாறி, குறித்தநாளில் இலக்கை அடையும் இறக்கை முளைத்த அதிசயங்களான இடம்பெயர் பறவைகள்.. அடடா.. இறைவன் படைப்பின் இன்னொரு பரிணாமம்.!

உலகம் முழுவதும் உள்ள இந்த இடம்பெயர் பறவைகளின் தினம் ஆண்டில் இருமுறை கொண்டாடப்படுகிறது. மே மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையும், அக்டோபர் மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமையும். இந்த தினங்களை சிறப்பிப்பதன் நோக்கம், இடம்பெயரும் பறவைகளை பாதிக்கும் பிரச்சினைகளை உணர்வதும், உலகம் முழுவதும் அவற்றைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் தான்.
இடம் பெயரும் பறவைகள் இடப் பெயர்ச்சியின் போது நாளொன்றுக்கு 15 முதல் 600 மைல்கள் வரை பறக்கக் கூடும். பறக்கும் காலத்தின் தன்மை, போகும் தூரம், வழியில் அவை எதிர்கொள்ளும் தடங்கல்கள், பிரச்சினைகளைப் பொறுத்து பறக்கும் வேகமும் மாறலாம். பெரும்பாலான பறவைகள் 2000 அடி உயரத்திற்கு மேல் பறப்பதில்லை. பார் ஹெடட் கூஸ் போன்ற ஒரு சில பறவைகள் 30ஆயிரம் அடி உயரத்திற்கும் மேல் பறப்பதாகத் தெரிகிறது. பருந்து, சிட்டுக்குருவி, ஸ்வாலோ, போன்றவை பொதுவாக பகலில் தான் இடம்பெயர்கின்றன. இடம்பெயரும் பறவைகளிலேயே வேட்டையாடும் பறவைகளுக்குத் தப்புவதற்காக சில பறவைகள் இரவில் மட்டும் இடம் பெயர்கின்றன.
1993 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இருமுறை உலக இடம் பெயரும் பறவைகள் தினம் கொண்டடப் படுகிறது. யூ. எஸ். ஃபிஷ் அண்ட் வைல்ட் சர்விஸ் உள்பட பல்வேறு இயக்கங்கள் இந்த நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்கின்றன.
 

NewsGlitz in Social Media
Share to your pages!
Close