அமெரிக்காவில் உள்ள விஸ்கான்ஸின் தென் பகுதியில் உள்ள சிறிய ஊரில் 62 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன ஆட்ரி பேக்பெர்க், வீட்டுப் பணிப்பெண்ணுடன் இண்டியானாபொலிஸுக்குப் போனதாகக் கூறப்படுகிறது. அவர் எங்கு சென்றார் அல்லது அவருக்கு என்ன நடந்தது என்பது புதிராகவே இருந்தது.
சென்ற ஃபெப்ரவரி மாதம், வேறொரு வழக்கை விசாரிக்கத் தொடங்கிய காவல் அதிகாரி மூலம் இந்த புதிருக்கு விடை கிடைத்தது. ஆட்ரி, மற்றொரு நகரத்தில் பாதுகாப்பாக நலமுடன் வாழ்ந்து கொண்டிருப்பதை அந்த காவல் அதிகாரி கண்டுபிடித்தார்.
ஐசக் ஹான்ஸன் என்னும் அந்த புலனாய்வு அதிகாரி மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வழக்கை விசாரிக்கும் போது, அது ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து புலனாய்வுத் தகவல்களை கட்டவிழ்க்க, ஆட்ரி பேக்பெர்க் மற்றொரு மாநிலத்தில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
தரக்குறைவாக நடத்திய கணவனிடம் இருந்து தப்பிக்கும் எண்ணத்துடன் தான் அவர் விஸ்கான்ஸினை விட்டுச் சென்றதாக காவல் அதிகாரி கூறினார்.
அவர் இப்போது மகிழ்ச்சியாக, பாதுகாப்பாக, யார் கண்ணிலும் படாமல் வெகுகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என்ற ஐசக் ஹான்ஸன், ஆட்ரி பேக்பெர்க்கின் குடும்பத்தினரின் உதவியுடன் அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சென்ஸஸ் பதிவுகள், மரண அறிவிப்புகள், திருமணச் சான்றிதழ்கள் இவற்றை ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குப் பின், அவர் வசிக்கும் வீட்டின் முகவரியைக்கண்டுபிடிக்கிறார்.
பேக்பெர்கின் பிறந்த தேதி, சமூக பாதுகாப்பு எண் ஆகியவை அவரை அடையாளம் காட்டின. இப்போது 80 வயதாகி விட்ட ஆட்ரி பேக்பெர்க் ஹான்ஸனுடன் தொலைபேசியில் பேசினார். அவரது கதையைக் கேட்ட பிறகு, அவரைப் பற்றிய தகவல்களை வெளியிட மறுத்த ஐசக் ஹான்ஸன், அவர் இன்னும் கண்டுபிடிக்கப் படாமல் இருப்பது அவசியமானது என்று குறிப்பிட்டார்.
கிட்டத் தட்ட அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை பாதுகாப்பாக கண்டுபிடித்தது நம்பமுடியாத ஒன்று. அவர் விரும்பி தனது குடும்பத்துடன் இணைந்தால் தனக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்று கூறிய அவர்,
காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட பெண் குடும்ப வன்முறை காரணமாக 60 வருடங்களாக மற்றொரு மாநிலத்தில் குடும்பத்தினர் கண்களுக்கு மறைந்து வாழ்வது வேதனையான உண்மை என்றும் குறிப்பிட்டார்.