தாய்லாந்து சரபுரி பகுதியிலுள்ள ஒரு மயானத்தில் வெட்டியானாக வேலை பார்க்கும் ஒருவர் அங்கு வரும் சடலங்களின் தங்கப் பற்களை எடுத்து உருக்கி சில லட்ச ரூபாய் சம்பாதித்த விபரம் சமுக வலைத்தளங்கள் மூலமாக வெளியே வந்திருக்கிறது.
மேற்படி நபர் தான் நீண்ட காலமாக சேமித்து வைத்திருந்த தங்க பற்களை நகரிலுள்ள ஒரு தங்கம் விற்கும் கடைக்கு சென்று அதனை விற்க முயற்சித்தபோதே கடைக்காரின் டிக்டாக் வீடியோ மூலம் இந்த விஷயம் வெளியுலகிற்கு தெரியவந்தது.
ஆரம்பத்தில் தங்கப் பற்களை கொண்டுவந்த நபர் மீது சந்தேகம் கொண்ட கடைக்காரர், அவரிடம் துருவி துருவி விசாரித்தபோது ’சில நேரங்களில் இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்ய வருபவர்கள் அதில் இருக்கும் தங்க பற்களை அப்படியே விட்டு விட்டு போய் விடுகிறார்கள்.. அவர்கள் அவற்றை எடுத்துச் செல்ல விரும்புவதில்லை..’ என்று சொல்லியிருக்கிறார்.
மேற்படி மயான ஊழியர் அந்த கடைக்காரிடம் உருக்கிய தங்கம் 21 கிராம் அளவுக்கு இருந்தாக அந்த டிக்டாக் பதிவில் கூறப்பட்டுள்ளது.
தங்கத்துக்காக மனிதர்களை கொல்லும் உலகில் அஸ்தியிலிருந்து தங்கத்தை சேகரிப்பதொன்றும் ஆபத்தானது இல்லைதான்!