1926-
ஆங்கில ஊடகவியலாளரும், மென்மையும், ஆழமும்மிக்க தனது வசீகரகுரலின் பின்னணியில் இயற்கையின் அதிசயங்களை ஆவணப்படங்களாக்கி தமக்கென்று ஒரு பாணியை உருவாக்கிக்கொண்ட டேவிட் அட்டன்பரோ பிறந்தார்.
1886-
அட்லாண்டாவில் ஜேக்கப்’ ஸ்ஃபார்மஸியில் கொக்கோ இலையின் சாறு சேர்க்கப்பட்ட ஆரோக்கிய பானமாக முதல் முதலாக கொக்கோ கோலா பரிமாறபட்டது. ஒரு நாளுக்கு ஒன்பது கோப்பைகள் என்ற சராசரியில் மிக மெதுவாகவே ஆரம்பம் ஆன அதன் வளர்ச்சி விரைவிலேயே உலகம் முழுவதும் அசுரவேகத்தில் பிரபலமானது.
1945-
ஐரோப்பாவின் வெற்றிநாள் (அல்லது V-E Day).
இரண்டாம் உலகப்போரின் முடிவில் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் நேசநாடுகளிடம் சரணடைந்தது. 1945,மே 8 ஆம் நாள் ஐரோப்பாவில் உண்டான அமைதியை உலகமே கொண்டாடியது.
1958-
பழம்பெரும் திகில் படமான ”ட்ராகுலா” வெளியானது. இரத்தக் காட்டேரியாக கிறிஸ்டோஃபர்லீ, பீட்டர் கஷ்ஷிங்குடன் இணைந்து நடித்த அந்த திரைப்படத்தை டெரென்ஸ் ஃபிஷ்ஷர் இயக்கி இருந்தார்.
1980-
உலகசு காதார அமைப்பு உலகில் அம்மை நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அறிவித்தது. இது வரலாற்றிலேயே மிக முக்கியமான, முழுமையான உலகப் பொதுசுகாதார வெற்றிகளில் ஒன்றாக திகழ்கிறது.
1978-
ரெயின் ஹொல்ட்மெஸ்னர் மற்றும் பீட்டர் ஹபெலர் ஆக்ஸிஜன் சிலிண்டர் எதுவுமின்றி முதல் முதலாக எவரெஸ்டில்ஏறினர்.
1963-
முதல் முதலாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை திரையில் சித்தரித்திருந்த அமெரிக்கவெளியீடான “டாக்டர்.நோ” வெளியானது.
1846-
மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் மூண்டது. சகரி டெய்லர் என்னும் தளபதியால் நடத்தப்பட்ட அமெரிக்கப்படைகள் மெக்ஸிகனுடன் ஆன முதல் பெரிய போரில் தோற்கடிக்கப்பட்டது.
வரலாற்றில் இன்று மே 8
schedulePublished May 8th 25
thumb_upLike
commentComments
shareShare
schedulePublished May 8th 25