மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும் உலகம் போற்றும் தொழில் அதிபருமான பில்கேட்ஸ் அடுத்த இருபது ஆண்டுகளில் தனது மொத்த சொத்தில் தொண்ணூறு சதவிகிதம் பகுதியை அறப்பணிகளுக்கு வழங்கப் போவதாக கூறியுள்ளார்.
எட்டு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துள்ள பில்கேடஸ் ’என் மரணத்திற்கு பின்னர் பலரும் என்னைப்பற்றி பலவிதமாக பேசலாம் ஆனால் யாரும் பில்கேட்ஸ் செல்வந்தனாகவே இறந்தான் என்று சொல்லக்கூடாது..’ என்று குறிப்பிட்டுள்ள அவரின் சொத்து மதிப்பு 113 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
69 வயதான பில் கேட்ஸ், தனது அறக்கட்டளை மூலம் ஏற்கனவே 100 பில்லியன் டாலர்களை பொதுக்காரியங்களுக்கு பயன்படும் வகையில் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தற்போது பில்கேட்ஸ் அறிவித்தபடி தனது சொத்து மதிப்பில் பத்து சதவிகித்தை தன் வாரீசுகளுக்கு அளித்தாலும் அதுவே அவர்களுக்கு பல தலைமுறைக்கு போதுமானதாக இருக்கும்.