நோவா ஸ்காட்டியா பகுதியில், ஆள்நடமாட்டமற்ற அடர்ந்த காடுகளுக்குள் வழி தப்பி இருக்கலாம் என்று கருதப்படும் லில்லி சுலைவான்(6) மற்றும் ஜேக் சுலைவான்(4) இருவரையும் தேடும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.
சுமார் 150 பேர் கொண்ட குழு, கடும் மழையையும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் ஹாலிஃபாக்ஸ்க்கு வடகிழக்கில் உள்ள பிக்டூ பகுதியிலுள்ள சிறுவர்களின் வீட்டைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் தேடிக் கொண்டிருக்கிறது.
சிறுவர்களின் தாய் மலெஹ்யாவும் அவரது இரண்டாவது கணவர், டேனியலும், வெள்ளிக்கிழமைக் காலையில் தூங்கிக் கொண்டிருந்த போது, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் விழித்துப் பார்க்கும் போது அவர்களைக் காணவில்லை என்றும் கூறினர்.
ராயல் கனேடியன் காவல்துறை, சிறுவர்கள் இருவரும் வெளியில் போய் விளையாடும் போது வழி தெரியாமல் அடர்ந்த காடுகளுக்குள் சென்றிருக்கலாம் என்று நம்புகிறது.
மோப்பநாய் குழுக்களுடன் தீவிர தேடுதலில் களமிறங்கிய காவல் துறை தெர்மல் இமேஜிங் கேமிராக்கள் உள்ள ட்ரோன்களையும் பயன்படுத்துகிறது.
பல உத்திகளை பயன்படுத்தி காட்டுப்பகுதியை முழுமையாக துருவி தேடி குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில் தாங்களது தேடுதல் திட்டம் வகுக்கப் பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
நோவா ஸ்காட்டியா பகுதியிலுள்ள சீப்பெக்-நாகடீக் சமூகத்தைச் சேர்ந்த இந்த குழந்தைகள் பாதுகாப்பாக திரும்பிவர வேண்டும் என்று ப்ரார்த்த்னையுடன் காத்திருக்கிறோம் என்றும், பணியாளர்கள் 24/7 தொடர்ந்து ஓய்வின்றி தேடி வருவதாகவும், அப்பகுதியின் ப்ரீமியரான டிம் ஹவுஸ்டன் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வெளியான பதிவில் சிப்பெக்-நாகடீக் சமூகத் தலைவரான மிஷல் க்ளாஸ்கோ குழ்ந்தைகள் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நாடு முழுவதும் ஆம்பர் அலஎர்ட் கொடுக்கப் பட வேண்டும் என்றும், ”எப்படியாவது எங்கள் குழந்தைகளை மீட்டுத் தாருங்கள்” என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
கனடா - காட்டுகளுக்குள் காணாமல்போன சிறுவர்கள்
schedulePublished May 10th 25
thumb_upLike
commentComments
shareShare
schedulePublished May 10th 25