267 ஆவது போப்- கத்தோலிக்கத் திருச்சபையில் முதல் அமெரிக்க போப்..!

thumb_upLike
commentComments
shareShare

267 ஆவது போப்- கத்தோலிக்கத் திருச்சபையில் முதல் அமெரிக்க போப்..!


புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் உலகெங்குமுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவர் களின் தலைவராக, 267வது போப், ரெவ். ராபர்ட் ப்ரெவோஸ்ட் அறிவிக்கப் பட்டுள்ளார். 69 வயதான அவர் இனி பதினான்காம் லியோவாக அறியப் படுவார்.
அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் போப் இவர் தான் ஆனாலும், லத்தீன் அமெரிக்காவில் இருந்து வந்த கர்தினாலாக அவர் அறியப்படுகிறார். இவர் தமது ஆலயத் திருப்பணியைத் தொடங்கும் முன், தனது வாழ்நாளின் பெரும் பகுதியை பெரு நாட்டில் மிஷனரியாக கழித்தது தான் அதற்கு காரணம்.
அமெரிக்காவின் சிகாகோவில், ஸ்பானிய மற்றும் ஃப்ரான்கோ - இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோர்களுக்கு மகனாக 1955ஆம் பிறந்த இவர் சிறுவயதிலேயே ஆலயத்தில் உதவி செய்யும் (Altar boy) சேவை செய்தவர். 1982ஆம் ஆண்டு மதபோதகராகப் பொறுப்பேற்றார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் பெருவுக்கு குடி பெயர்ந்து, பெரு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அவர், அங்குள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முன்னேற்றத்திற்காகப் பணியாற்றியதோடு, வடமேற்கு பெருவில் அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மதபோதகராகவும், அங்கு ஜுரில்லோவில் செயல்பட்டு வந்த இறைப்பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
மறைந்த போப் ஆண்டவர் ஃபிரான்சிஸ் பொறுப்பேற்ற ஒரே ஆண்டில், ராபர்ட் ப்ரெவோஸ்டை சிக்லயோவின் பாதிரியாராக நியமித்தார். லத்தீன் அமெரிக்காவில் பாதிரியார்களைத் தேர்வு செய்து, கண்காணிக்கும், நிர்வாகக் குழுவின் சிறந்த தலைவராக அவர் செயல்பட்டதால் மற்ற கர்தினால்கள் நடுவிலும் பிரபலமானவராக இருந்தார் ரெவ். ராபர்ட் ப்ரெவோஸ்ட்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேராயராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே போப் ஃபிரான்சிஸ் அவரை கர்தினாலாக நியமித்தார்.
இவர் சமீபத்தில் தான் கர்தினாலாக தேர்வு செய்யப் பட்டிருந்தாலும், போப்பை நியமிக்கும் 'கான்க்ளேவ்' நிகழ்வில் பங்கேற்ற 80% கார்டினல்கள் ஃபிரான்சிஸால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால், ராபர்ட் ப்ரெவோஸ்டை அவர்கள் தேர்வு செய்திருப்பதில் ஆச்சர்யம் இல்லை. விவா இல் பாபா..(நீடூழி வாழ்க தந்தையே!)

NewsGlitz in Social Media
Share to your pages!
Close