இந்தியா பாக்கிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு போப் பாராட்டு

இந்தியா பாக்கிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு போப் பாராட்டு

புதிய போப் பதினாங்காம் லியோ, தமது முதல் ஞாயிறு உரையின் போது
உக்ரேய்னில் அமைதி நிலவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
காஸாவில் போர் நிறுத்தமும், மனித நேய உதவிகளும் தேவை என்றதோடு இந்திய- பாகிஸ்தானுக்கு இடையே ஆன போர்நிறுத்தத்தைப் பாராட்டினார்.
“மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் சிறு போர்கள்” என்று அவர் குறிப்பிட்ட உலகளாவிய சில கலகங்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றும், உக்ரெய்னில் நீண்ட அமைதி உருவாக வெண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
புனித பேதுரு பேராலய மாடத்திலிருந்து பேசிய அவர், “ அன்பிற்குரிய உக்ரேய்ன் மக்களின் துயரங்களை நான் என் நெஞ்சில் சுமக்கிறேன். உண்மையான நீதியுள்ள நீண்ட அமைதி விரைவிலேயே ஏற்பட சாத்தியமான எல்லாம் செய்யப் படவேண்டும்” என்றவர், போர்க்கைதிகளை விடுக்கவும், உக்ரேய்ன் குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் சேரவும் ஆவனச் செய்யும் படி கேட்டுக் கொண்டார்.
முந்தைய போப்புகளைப் போல அவர் ஜன்னல் முன் நின்று ஆசிகளை வழங்காமல், திறந்த பிரதான மாடத்தில் நின்று விசுவாசிகளை ஆசீர் வதித்தார். வழக்கமான சிவப்பு மேலங்கி அணியாமல், எளிமையான வெண்ணிற அங்கியை அணிந்திருந்த போப், ‘காஸாவை தொடர்ந்து துளைத்தெடுக்கும் இஸ்ரேலியப் படைகள் போரை நிறுத்த வேண்டும் என்றும் 2023, அக்டோபரில் ஹமாஸ் தாக்குதலில் பிணைக் கைதிகளாக பிடிக்கப் பட்டவர்கள் திருப்பி அனுப்பப் படவேண்டும் என்றும் அவர் கோரினார். உணவு மற்றும் மருந்து பற்றாகுறையினால் குழந்தைகள் நலிந்து போயிருப்பதால், “சோர்ந்து போன பொதுமக்களுக்கு மனிதநேய உதவி கிடைக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.
ஞாயிறன்று பெரும்பாலான நடுகளில் “அன்னையர் தினம்” கொண்டாடப்பட்டதை குறிப்பிட்ட அவர்,”பரலோகத்தில் உள்ள அன்னையர்கள் உள்பட” எல்லா அன்னையர்க்கும் ‘அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
முந்தைய போப்புகளின் கல்லறைகள் உள்ள புனித பேதுரு பேராலயத்தின்
நிலவறைக் குகையில் ஏற்கனவே திருப்பலி நிறைவேற்றிய போப், சாண்டா மரியா மேகியோர் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப் பட்ட போப் ஃப்ரான்சிஸ் அவர்களின் கல்லறைக்குச் சென்று பராத்தனை செய்தார். போப் பதினாங்காம் லூயியின் அதிகாரப் பூர்வமான முதல் திருப்பலி அடுத்த ஞாயிறு மே 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 

Trending Articles