தாய்லாந்தின் பாங்காக்கில் பெரும்பாலான பயணிகள் பரவி வரும் கொரோனா வைரஸ் மற்றும் காற்றில் கலந்துள்ள மாசுகளிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக முகத்தில் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள்.
தாய்லாந்தின் நோய்த்தடுப்புத் துறையின் அறிக்கைப் படி, கொரோனா வைரஸ், மற்றும் இன்ஃப்ளுயன்ஸா கிருமிகள் மழைக்காலத்தில் வேகமாக பரவலாம் என்று எதிர்பார்க்கப் படுவதாலும், அடுத்த வாரத்தில் பள்ளிகள் அடுத்த கல்வியாண்டிற்காக திறக்கப்படவிருப்பதாலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆண்டின் தொடக்கத்திலிருந்தே 41,197 பேர் கோவிட்-19 னால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அதில் பெரும்பாலானோர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்றும், 15 பேர் இறந்துவிட்டதாகவும் நோய்துறைத் தடுப்பு அமைப்பின் இயக்குனர் டாக்டர். பனுமாஸ் தெரிவித்தார். அதே காலக் கட்டத்தில் 3,22,991 பேர் இன்ஃப்லூயன்ஸாவால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், 43 பேர் மரம்னஅடைந்ததாகவும் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.
மே 4ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் இடையில் 7,013 கோவிட் நோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும் ஒருவர் இறந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
டாக்டர் பனுமாஸ் மேலும், “ தாய்லாந்தில் நெரிசலான பகுதிகளில் இந்த நோய்த்தொற்று தொடர்ந்து பரவ வாய்ப்புள்ளது என்றும், குறிப்பாக இந்த மழைக் காலத்தில் மிக அதிகமாகப் பரவலாம்” என்று கூறினார்.
கடந்த வாரத்தில் நடந்த ஸாங்கிரான் திருவிழாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலைத் தொடர்ந்து கடந்த வாரங்களில் நோதொற்று அதிகரித்திருப்பதாக நம்பப் படுகிறது
ஆனாலும், கடந்த வருடங்களை இந்த வருடம் நோய்தொற்று குறைவாகவே இருப்பதாகவும் டாக்டர் பனுமாஸ் கூறினார்.
கொரானோ வைரஸில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கண்காணித்துவரும்
மருத்துவ அறிவியல் துறை, தாய்லாந்தில் கொரோனா சூழ்நிலை பரிணாமம் அடைவதாகக் கூறுகிறது.
தாய்லாந்தில் பரவும் கொரோனா...
schedulePublished May 10th 25