பூனைக்காக நடந்த கொலை - பட்டம் பெறுமுன் பரிதாபம் !

பூனைக்காக நடந்த கொலை - பட்டம் பெறுமுன் பரிதாபம் !

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு லண்டனிலிருந்து செவிலியர் பட்டப்படிப்பு பயில வந்த தமிலோர் ஓடுன்ஸி , தன் பட்டமளிப்பு விழாவுக்கு சில தினங்களுக்கு முன்னர் , தான் தங்கியிருந்த அபார்ட்மெண்டில் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தார். விசாரணையில் ஒடுன்ஸியுடன் கடந்த இரு மாதங்களாக வசித்து வந்த செஸ்டர் லமார் க்ராண்ட் என்பவர்தான் அவரை கத்தியால் குத்தியதுடன் தன்னைத் தானே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்திருக்கிறது.
கொலையாளியும், கொல்லப்பட்டவரும் தாங்கள் தங்கியிருந்த அறையில் பூனைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்ததாகவும் அந்த பூனைகளை பராமரிப்பது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தின் முடிவிலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
ஒடுன்ஸியை குத்திய பின், க்ராண்ட் என்னும் அந்த 40 வயது நபர் கழுத்து உள்பட ஆறு இடங்களில் தன்னைத் தானே குத்தி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார். ஆனால் அதிஷ்டவசமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மீது தற்போது கொலைக் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த ஒடுன்ஸியின் டிக்டாக் கணக்கில் தன் படிப்புத் தொடர்பான பதிவுகளும், அவரது கல்லூரி தொடர்பான பதிவுகளும் 30ஆயிரத்திற்கும் மேலான ஃபாலோவர்ஸைப் பெற்றிருக்கின்றன. பட்டமளிப்பு விழாவுக்கு இன்னும் சில தினங்களே இருந்த நிலையில் ‘தன் வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லைத் தொடப் போவதாகவும், விடுமுறைக்கான ஆயத்தங்கள் செய்துவிட்டதாக’வும், மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார் தமது டிக்டாக் பதிவில்..!

Trending Articles