கழுத்து வழியாக முட்டையிடும் அபூர்வ நத்தைகள்

கழுத்து வழியாக முட்டையிடும் அபூர்வ  நத்தைகள்

யார் கண்ணிலும் படாமல், யுகயுகமாக பூமியில் அரங்கேறிக் கொண்டே இருக்கும் இயற்கையின் ரகசியங்கள் கணக்கில்லாதவை. இறைவன் ஆங்காங்கே மறைத்து வைத்திருக்கும் அதிசயங்களை தேடி எடுக்கும் மனிதன் குழந்தை போல குதூகலிக்கிறான். அப்படிப்பட்ட ஒரு குதூகலத்தின் தருணம் தான் மவுண்ட் அகஸ்டஸ் நத்தை என்னும் ஒருவகை நத்தை சுமார் 20 வருடங்களுக்குப் பின் முட்டையிடும் காட்சியை ஆராய்ச்சியாளர்கள் படமெடுத்த தருணம்.

நியூசிலாந்தின் மவுண்ட் அகஸ்டஸ் எனும் நத்தை முட்டையிடும் காட்சி, கேமராவில் பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை. இது அழிவின் விளிம்பில் உள்ள ஒரு நத்தை இனம். இந்த சிறிய ஆனால் அசாதாரணமான தருணம் வனவிலங்கு பாதுகாவலர்களுக்கு ஒரு மிக முக்கியமான சம்பவம் என்பதோடு, நியூஸிலாந்திலுள்ள ஒரு மிக அபூர்வ வகை நத்தையின் இனப்பெருக்க ரகசியத்தை இது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த நத்தை கழுத்தில் உள்ள துளை வழியாக முட்டையிடுகிறது.
நியூஸிலாந்தின் வடக்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மவுண்ட் அகஸ்டஸில் மட்டுமே வாழும் இந்த வகை நத்தை அதன் இயற்கை வாழிடம் ஆக்கிரமிக்கப் பட்ட பின், அழிவின் விளிம்புக்குத் தள்ளப் பட்ட நிலையில், ஆராய்ச்சியளர்கள் பெருமுயற்சி எடுத்து அவற்றை பாதுகாக்கப்பட்ட இடங்களில் வளர்க்க ஆரம்பித்தனர். சுமார் 20 ஆண்டுகால பராமரிப்புக்குப் பின், இவ்வகை நத்தைகள் முட்டையிடும் காட்சியை அவர்களால் படமெடுக்க முடிந்துள்ளது.

பொதுவாக நத்தைகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைய எட்டு ஆண்டுகள் ஆகுமாம். அதன் பின்னர், வருடத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முட்டைகளே இடும் இந்த வகை நத்தைகள் பராமரிக்கப்பட்ட பாதுகாப்பிடத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முட்டையிட்டது தங்களது ஆராய்ச்சியில் மிக முக்கியமான மைல்கல் என்று ஆராய்ச்சியாளர்கள்

Trending Articles