நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் .. தாய்லாந்து பயணத்தை மறைக்க விபரீதம்..

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் .. தாய்லாந்து பயணத்தை மறைக்க விபரீதம்..

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து மும்பைக்கு வந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது வரிசையில் வந்த பூனேவை சார்ந்த ஐம்பத்தொன்று வயது வி கே பாலேராவ் என்பவரது பாஸ்போர்ட்டில் சில பக்கங்களை காணவில்லை என்பதை கண்டறிந்த அதிகாரிகள், அவரிடம் குறிப்பிட்ட பக்கங்கள் எங்கே என்று வினா எழுப்ப, அதிகாரிகளுக்கு உரிய பதிலளிக்காமல் மழுப்பலாக பதில் சொன்னார் பாலேராவ்.

அவரது பதிலில் திருப்தியடையாத அதிகாரிகள் அவரை விடாமல் துருவி விருவி விசாரணை செய்ய தான் ஏற்கனவே இரண்டு முறை தாய்லாந்து சென்று அங்கு அழகிகளுடன் கும்மாளமிட்டு திரும்பியதையும், தன் கிளுகிளு பயணங்களை மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் மறைக்கவே பாஸ்போர்ட்டில் தாய்லாந்து சென்று வந்ததற்கான ஆதாரங்கள் இருந்த ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை இடப்பட்ட குறிப்பிட்ட பக்கங்களை தான் கிழித்தாகவும் ஒப்புக் கொண்டார் பாலேராவ்.

ஒருவர் தன்னுடைய சொந்த பாஸ்போர்ட்டேயானாலும் அதை திருத்துவதோ கிழிப்பதோ சட்டப்படி குற்றம் என்பதால் அவர்மீது இந்திய நியாய சங்கீதா பிரிவு 318 (4) அவர் மீது வழக்கு பதிவு செய்த போலிசார் அவரை கைது செய்தனர்.

எதை மறைக்க நினைத்து பாலேராவ் பாஸ்போர்ட்டின் பக்கங்களை கிழித்தாரோ அதுவே அவருக்கு கண்ணியாகி அவரை சிக்க வைத்துவிட்டது.

Trending Articles