வரலாற்றில் இன்று: மே 7

1861- 'கீதாஞ்சலி' என்ற கவிதை நூலுக்காக நோபெல் பரிசு பெற்ற இந்திய மகாகவி தாகூர் பிறந்த தினம். வங்க மறுமலர்ச்சி யுகத்தில், கவிஞராக, எழுத்தாளராக, நடக ஆசிரியராக, கல்வியாளராக, சமூக சீர்த்தவாதியாக, விடுதலைப் போராட்ட வீரராக பன்முகத் திறமையுடன் திகழ்ந்த ரவீந்திர நாத் தாக்கூர் பிறந்தார்.
1915- நான்கு புகைப் போக்கிகளைக் கொண்ட ஆர் எம் எஸ் லூசிதானியா (டைட்டானிக் போன்ற) பெரிய பிரிட்டிஷ் கப்பல் 1915 ஆம் ஆண்டு அயர்லாந்தின் தென்கடற்கரை அருகில் ஜெர்மானிய யூ- படகின் ஏவுகணைத் தாக்குதலால் 18 நிமிடங்களில் மூழ்கியது. கப்பலில் இருந்த 2000 பயணிகளில் 128 அமெரிக்கர் உள்பட 1198 பேர் இந்த தாக்குதலில் இறந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போரின் முடிவில், நாஸி ஜெர்மனி, ஃப்ரான்ஸ் நாட்டின் ரெய்ம்ஸ் நகரில் இருந்த நேசநாடுகளின் தலைமையகத்தில் நிபந்தனையற்ற விதத்தில் சரணடைந்து கையெழுத்திட்டது.
1919 -அர்ஜெண்டினா ஜனாதிபதி ஜுவான் பெரோனின் மனைவியாக, ஒரு சக்திவாய்ந்த அரசியல் பிரமுகராகவும், கீழ் வகுப்பினரின் ஆதரவாளராகவும் திகழ்ந்த ஈவா பெரோன் பிறந்தார்.
1934- சுமார் 6.4 கிலோகிராம் எடையுள்ள முத்து பிலிப்பைன்ஸிலுள்ள பலவன் என்ற இடத்தில் கிடைத்தது. உலகிலேயே அதிக எடையுள்ள முத்து இது தான்.
1954 – 55 நாட்கள் வரை நீடித்த வியட்நாமின் டியன் பியன் ஃபூ போரில், ஃப்ரெஞ்சுப் படை வியட்நாமிய வீரர்களால் தோற்கடிக்கப் பட்டது. முதல் இந்தோசீனா போரின் மிகப் பெரிய இறுதிப் போராக இருந்தது.
2017- இந்திய திரைப் படத்துறையிலேயே சுமார் ரூ 1020 கோடி வசூல் ஆன “பாகுபலி: இரண்டாம் பாகம்” என்ற திரைப் படம் வெளியானது.

Trending Articles