1813- ''இருத்தலியல் தத்துவத்தின்(Existentialist Philosophy) தந்தை'' என்றழைக்கப்படும் டென்மார்க்கைச் சேர்ந்த மத தத்துவ வாதி சோரன் கியர்கேகார்ட் பிறந்தார்.
1818- தத்துவ ஞானியும், பொருளாதார மேதையும், சோஷலிஸ புரட்சியாளரும், கம்யூனிஸக் கட்சி அறிக்கை” “மூலதனம்” ஆகிய நூல்களின் ஆசிரியருமான கார்ல்மாக்ஸ் ஜெர்மனியில், டிரியர் நகரில் பிறந்தார். ”
1821- நாடு கடத்தப் பட்டு, செயிண்ட் ஹெலினா தீவில் இருந்த ஃப்ரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் தமது 51ஆம் வயதில் இறந்தார்.
1916- பிரிட்டிஷ் படைகளின் ஆதரவுடன், முதலாம் உலகப் போரில் ஒட்டமன் பேரரசைக் கவிழ்த்து, மத்திய கிழக்கு நாடுகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உருவாக்கி, இன்றைய அரபுநாடுகளை வடிவமைத்த அரேபிய கலகம் தொடங்கியது.
1925- டென்னஸைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஜான் டி. ஸ்கோப்ஸ் என்பவர் டார்வினின் பரிணாமக் கொள்கையை கற்பிக்கக் கூடாது என்ற சட்டத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப் பட்டார்.
1945- ஓரிகனிலுள்ள கியர்ஹார்ட் மலையில் பிக்னிக் சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணும், ஐந்து குழந்தைகளும், ஜப்பானிய பலூன் குண்டு வெடித்து கொல்லப் பட்டனர். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மீது நடந்த ஒரே கொலை தாக்குதல் இது தான்.
1981- அயர்லாந்து நாட்டில் குடியரசுப் படையைச் சேர்ந்த பாபி சாண்ட்ஸ் 27 ஆவது வயதில் வடக்கு அயர்லாந்தில் மேஸ் சிறையில் 66 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிரிழந்தார்.