பள்ளிப் படிப்பு முடியும் இறுதி நாள். “பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறவைகளே! என்று பாடி, பரிசுகள் கொடுத்து, வகுப்பு முழுவதும் நினைவுப் பொருட்களை வாங்கிய நினைவுகள் மறக்க முடியாதவை. அப்படித் தான் அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் 1938ல் வகுப்பு நினைவுப் பரிசாக வருடமும், வகுப்புப் பெயரும் பொறிக்கப் பட்ட மோதிரங்களை ஒரு வகுப்பு மாணவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.
அதில் ஒன்று சென்ற வாரத்தில் அதே பகுதியிலுள்ள ஸ்டார்பக்ஸின் கார் பார்க்கில் லோரி ரீவ் என்ற பெண்ணின் கையில் கிடைத்தது. அழகான அந்த மோதிரத்தில் ”1938” என்று எழுதி இருப்பதைக் கண்ட லோரி இது ஏதோ குடும்ப பாரம்பரியச் சின்னம் என்ற முடிவுக்கு வந்தார்.
“நான் செண்டிமண்டலான நபர். குடும்ப பாரம்பரியங்களை மிகவும் விரும்புபவள்” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளும் இவர் ”அதை விற்கவோ, அல்லது எறிந்து விடவோ எனக்கு மனம் வரவில்லை” என்கிறார்.
உருப்பெருக்கக் கண்ணாடியை பயன்படுத்தி மோதிரத்தில் பொறித்திருந்த எழுத்துகளையும் எண்களையும் துல்லியமாக கண்டுபிடித்து, சற்று நேர இணைய தள அலசலுக்குப் பின், அது
1938 ஆம் ஆண்டு வர்ஜீனியா டெக் வகுப்பு பட்டதாரியான வலேஸ் கார்ஸ்ட் என்பவருடையது என்றும் அவர் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டதையும் அறிகிறார்.
மேலும் இணைய தளத்தின் மூலம் அவருக்கு ஒரு மகன் இருந்ததையும், அவரும் 2024ல் இறந்து விட்டதையும், அவரது நினைவஞ்சலி செய்தி மூலம் தெரிந்து கொள்ளும் அவர், செய்திப் படத்தில் அந்த நபர் தந்தையின் மோதிரத்தை விரலில் அணிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகக் கூறுகிறார்.
அந்த செய்தியிலேயே அவருக்கு லோரி ஸ்டாய் என்ற மகள் இருப்பதை அறிந்து, அவரை தொடர்பு கொள்கிறார் லோரா.
''தாத்தா எப்போதுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் தான் அவருடைய மோதிரத்தை அப்பா அணிந்திருந்தார் என்று நினைக்கிறேன்'' என்ற லோரி ஸ்டாய், அது தன்னிடம் திரும்பி வந்தது தன் அப்பாவின் ஒரு பகுதியே திரும்ப கிடைத்தது போலிருப்பதாக நெகிழ்ந்தார்.
“சென்ற ஆண்டு அவர் மறைந்ததிலிருந்து நான் அவரையே நினைத்துக் கொண்டிருப்பதால், “இதோ பார், நான் வந்துவிட்டேன்” என்று அவர் என்னிடம் வந்துவிட்டது போல உணர்கிறேன்” என்று கண்ணீர் மல்கக் கூறினார், லோரா ஸ்டாய்.
மோதிர உருவில் வந்த அப்பா.!
schedulePublished May 21st 25