அயர்லாந்தில், மாடி படிக்கட்டுகளின் கீழே தரையில் சிமெண்டின் நிறம் மாறு பட்டிருப்பதை கண்ட போலீசார் அதன்மீது கவனத்தை செலுத்தியதைத் தொடர்ந்து டப்ளினில் காணாமல் போன பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
டினா சாட்ச்வெல் என்ற பெண் காணாமல் போன வழக்கில், அவரது சொந்த வீட்டிலேயே மாடி படிக்கட்டுகளுக்குக் கீழ் கருப்பு பிளாஸ்டிக் கில் பொதிந்து வைக்கப் பட்ட அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது . வீட்டில் அணியும் பைஜாமா, நைட்கவுன் அணிந்திருந்த அவரது தலையிலும் கையிலும், கண்ணாடி துண்டுகள் உடைந்து குத்தி இருந்தன. இது டப்ளினை பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய ஒரு வழக்கு.
அயர்லாந்தின் டப்ளினில் யூகால் என்ற பகுதியில் கிரட்டன் தெருவைச் சேர்ந்த 58 வயதான சாட்ச்வெல், தனது மனைவியை 19 - 20 மார்ச் 2017 ல் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இங்கிலாந்தில் உள்ள லாய்செஸ்டரை பூர்வீகமாகக் கொண்ட சாட்ச்வெல், மே 11, 2017 அன்று தனது மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.
மனைவிக்கும் தனக்கும் ஏற்பட்ட சில பிரச்சினைகளால், மனக் கசப்பின் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்றும், போகும் போது, தாம் மாடியில் வைத்திருந்த 26,000 யூரோ பணத்தையும் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
துப்பறியும் நிபுணர் கார்டா ப்ரையன் பாரி சாட்ச்வெல்லின் வீட்டுக்குச் சென்ற போது, வரவேற்பறையில் இருந்த சுவர் “மிகவும் மோசமாக கட்டப்பட்டிருப்பதாக’ அவருக்குத் தோன்றிய போதே,அது கட்டுமானப் பணி தெரிந்தவர் கட்டியது போல இல்லையே என்ற நெருடல் தமக்குள் வந்ததாக அவர் கூறினார்.
அது மட்டுமல்ல, மோப்பநாயும் மாடிப் படிக்கட்டுக்கருகில் வந்ததும், உறுமி அவர் கவனத்தை ஈர்த்தது.
துப்பறியும் நிபுணர் பாரி ஊதா நிற விளக்கை மாடிப்படிக்கு அடியில் பாய்ச்சி பார்த்த போது அங்கு கான்கிரீட்டின் நிறம் சற்று புதிதாக வேறுபட்டு தெரிந்திருக்கிறது.
வித்தியாசமாகத் தோற்றமளித்த தரைப்பகுதியை கட்டுமானப் பணியாளர்கள்கள் சுத்தியலால் உடைக்க தரையிலிருந்து சுமார் 60 செமீ க்கு கீழே கருப்பு ப்ளாஸ்டிக் பை ஒன்று தெரிந்தது.
அவர் உடனடியாக, ஆணையருடன் தொடர்பு கொண்டு தடயவியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை சம்பவ இடத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டார்.
தேடுதல் சம்பவ இடத்தின் பொறுப்பாளருமான ஓய்வுபெற்ற துப்பறியும் அதிகாரி ஷேன் குர்ரான், மோப்பநாயின் உதவியுடன் “மனித உடல் பகுதிகள்” இருப்பதை உறுதி செய்தார்.
துப்பறியும் நிபுணர் கரேன் மெக்கார்த்தி கூறுகையில், டினா சாட்ச் வெல்லின் உடலில் ஒரு பைஜாமாவும், ஒரு பெல்ட், உள்ளாடைகள் மற்றும் பாக்கெட்டில் இருந்த பிளேபாய் லோகோவுடன் ஒரு பர்ஸும் இருந்ததாகக் கூறினார்.
அவரது தலை மற்றும் கையில் கண்ணாடி துண்டுகள் கண்டுபிடிக்கப் பட்ட தாகவும், அவை ஒரு போர்வையால் மூடப்பட்டிருந்ததாகவும், தெரிவித்தார். டினாவின் தலைமுடியை டிஎன்ஏ சோதனைகளுக்காக எடுத்ததாகவும் கூறினார்.
இரண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் ஒரு தடயவியல் மானுடவியலாளரும் உடலை மீட்க உதவியதாக கூறிய குர்ரான்
டினா சேட்ச்வெல்லின் உடல் கான்கிரீட்டிற்கு 84 சென்டிமீட்டர் கீழே புதைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.
புதைக்கப்பட்ட உடலுடன் கடையில் வாங்கும் ரொட்டி காலாவதி யாகும் நாள் குறிக்கப்பட்ட மஞ்சள் நிற வில்லை ஒன்று இருந்தது. அதில் மார்ச் 7 என்று குறிக்கப் பட்டிருந்தது.
பல வருடங்கள் ஆகி விட்டதால், இந்த ஆதாரங்களை எடுப்பது மிக மெதுவான கடினமான வேலை என்றும், சிக்கலானது என்றும் அவர் கூறினார். உலோகத் துண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவியும், நிலத்தைத் துளைத்து படமெடுக்கும் ரேடரும் கூட இதில் பயன்பட்டதாக அவர் கூறினார்.
மனைவியை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப் பட்ட நிலையில், ராபர்ட் சாட்ச்வெல்,” தமது மனவிக்கு கண்டுபிடிக்கப் படாத சில மனக்கோளாறுகள் இருந்திருக்கலாம் என்றும், அதனால் எந்த காரணமும் இல்லாமல் அவர் தன்னை தாக்குவது வழக்கம் என்றும் ஒருமுறை அவர் உளியால் தாக்கிய போது, தற்காப்புக்காக தாம் அவர் கழுத்தைப் பிடித்தத போது, அவர் இறந்துவிட்டதாகவும் கூறிய அவர், அது தற்செயலாக நடந்தது. திட்டமிட்ட கொலை அல்ல என்று கூறினார்.
வழக்குத் தொடர்கிறது