தாய்லாந்து நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பூங்கா கேவோ நா நை லுவாங் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதி. இங்குள்ள பௌத்த ஆலயத்தையும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையும் காணவும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இன்று காலை இந்தப்பகுதியை சுற்றிப்பார்க்க வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று இங்குள்ள காடுகளில் விளைந்திருந்த எபானோ என்ற காட்டுப் பழங்களை பறித்துத் தின்றனர்.சற்று நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் நெஞ்சு வலி போன்றவை ஏற்பட்டதுடன் நீர்சத்து குறைபாடும் அதைத் தொடர்ந்து மயக்கமும் ஏற்பட்டது.இது குறித்து தகவல் தெரிந்தும் அந்த பகுதிக்கு விரைந்த மருத்துவ மீட்புக் குழுவினர் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர்களுக்கு உரிய சிகிர்ச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
காட்டுப்பழங்களை தின்ற ரஷ்ய சுற்றுலாப்பயணிகள்?
schedulePublished May 7th 25