சட்டங்களும் கட்டுப்பாடுகளும் நிறைந்த சிங்கப்பூரில் ஒரு பராமரிப்பு பணியின் ஒப்பந்தத்தை லஞ்சம் கொடுத்து பெற்ற குற்றச்சாட்டில் தமிழ்நாட்டை சார்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு பதினையாயிரம் டாலர் அபராதத்துடன் சிறைத் தண்டனையும் வழங்கப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டை சார்ந்த எழுமலை பன்னீர்செலவம் என்ற ஒப்பந்ததார்ர சிங்கப்பூரில் மவுண்டெக் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறார். இவர் சிங்கப்பூரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கார் போகும் பாதையில் உள்ளை டைல்ஸ்களை மாற்றி புதிய டைல்ஸ்கள் ஒட்டும் பணியை தன் நிறுவனத்தின் பெயரில் ஒப்பந்தம் எடுத்தார்.எடுத்த வேகத்திலேயே பணி முடித்த சில நாட்களிலேயே சீர் செய்யப்பட்ட அந்த பாதை பழுதடைந்ததாகவும் தரம் குறைவானதாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்தது.
அதைத் தொடர்ந்து இதைப்பற்றி விசாரித்த சிங்கப்பூர் காவல் துறையினர் ஊழல் ஒழிப்பு சட்டத்தின்படி எழுமலை பன்னீர்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின் முடிவில் பன்னீர்செல்வம் இந்த வேலையை பெற அந்த அடுக்குமாடி குடியிருப்பின் அதிகாரி ஆண்ட்ரூஸ் என்பவருக்கு லஞ்சம் கொடுத்தது அதன்மூலம் அந்த ஒப்பந்தத்தை பெற்றது தெரிய வந்தது.
தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவந்த நிலையில் பன்னீர்செல்வத்திற்கு பதினைய்யாயிரம் டாலர் அபராதம் வித்தித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் தீர்ப்பு விபரம் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில் எழுமலை பன்னீர்செல்வத்திற்கு இரண்டு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தலைகுனிய வைத்த தமிழன்!
schedulePublished May 8th 25