தென்னாப்பிரிக்காவில் தொடரும் பயங்கரம்..

தென்னாப்பிரிக்காவில் தொடரும் சட்டவிரோதமான பயங்கரம்..

தென்னாப்ரிக்காவில் சட்டவிரோதமாக காட்டுவிலங்குகளை வேட்டையாடு வோர் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள்ளாகவே, நூற்றுக்கும் அதிகமான காண்டா மிருகங்களை வேட்டையாடி விட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. உலகில் அழிந்து கொண்டிருக்கும் ஒரு அரிய விலங்கினத்தை பாதுகாக்கும் முயற்சிகளை எள்ளி நகையாடும் விதமாக இந்த வேட்டைகள் பாதுகாக்கப்பட்ட தேசியப் பூங்காக்களிலேயே நடந்திருக்கின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.
இந்த தகவலைத் தெரிவித்த தென்னாப்ரிக்க சுற்றுச் சூழல் அமைச்சர் தியான் ஜார்ஜ் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை கொல்லப் பட்ட 103 காண்டா மிருகங்களில், 65 தேசியப் பூங்காக்களில் வேட்டையாடப் பட்டதாகக் கூறினார்.
உலகிலேயே அளவிலும், எண்ணிக்கையிலும் அதிகமான காண்டா மிருகங்கள் தென்னாப்பிரிக்காவிலேயே உள்ளன. இங்கு சுமார் 16 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரையிலான கறுப்பு மற்றும் வெள்ளை காண்டா மிருகங்கள் இருப்பதாக வனவிலங்கு பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது. ஆஃப்ரிக்கக் காடுகளில் அழிவின் விளிம்பை நெருங்கிக் கொண்டிருக்கும் கறுப்பு கண்டாமிருகங்கள் வெறும் 6400 மட்டுமே உள்ளதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் தெரிவிக்கிறது. அவற்றில் 2000 காண்டாமிருகங்கள் தென் ஆப்பிரிக்காவில் உள்ளன. சமீப காலங்களில் தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமான காண்டாமிருக வேட்டைக்கு பின்புலத்தில் செயல்படும் சட்டவிரோத அமைப்புகள் மீது அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது. சென்ற ஆண்டு மொஸாம்பிக்கில் அதன் எல்லையை ஒட்டி மைந்த தென் ஆப்பிரிக்க க்ருகர் தேசியப் பூங்காவில் காண்டாமிருக வேட்டை நடத்தி வந்த சைமன் எர்னஸ்டோ வலோய் என்பவருக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்புவழங்கியது மொஸாம்பிக் நீதி மன்றம்.
 

Trending Articles