மகனை என்கவுன்டர் செய்த காவல் அதிகாரியை என்கவுன்டர் செய்த தந்தை..!

மகனை என்கவுண்டர் செய்த காவல் அதிகாரியை என்கவுன்டர் செய்த தந்தை..!


அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் கார் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரையன் ஹின்டன் என்பவர் போலிஸ் தேடுதலின்போது தப்ப முயன்ற போது லேரி ஹேண்டர்சன் என்ற அதிகாரியால் அவரை சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனால் மறுநாளே லெரி ஹேண்டர்சன் ஒரு வாகன் விபத்தில் கொல்லப்பட்டார். அவர் மீது ட்ரக்கை ஏற்றிக் கொன்ற நபரைப் பிடித்து விசாரித்தபோது அது முன்தினம் கொல்லப்பட்ட ரையன் ஹிண்டனின் தந்தை என்ற விபரம் தெரிய வந்தது. தொடர்ந்து போலிஸ் நடத்திய விசாரணையில் 38 வயதான இ
நடந்ததுவிபத்துஅல்லஎன்றும், வேண்டுமென்றேகுறிவைத்துட்ரக்கைஏற்றிகாவல்அதிகாரியைகொலைசெய்ததாகவும்குற்றம்சாட்டப்பட்ட 38 வயதான ரோட்னிஹிண்டன் தன் மகனை என்கவுண்டர் செய்த அதிகாரியை பழி வாங்கும் நோக்கத்திலேயே விபத்துப்போல தோற்றமளிக்கும் வகையில் இந்த கொலையை செய்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், யன்ஹிண்டன் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞரான மைக்கேல் ரைட் என்பவர், காவல், அதிகாரி கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் முதன்மை அதிகாரியின் அலுவலகத்திற்கு வந்தரோட்னி ஹிண்டன், போலீஸ் தமதுமகனை சுட்டுக்கொல்லும் விடியோவைப் பார்த்துவிட்டு உணர்ச்சி வசப்பட்டு, எதுவும் பேசாமல் போனதாகச் கூறினார்.
வியாழன் அன்று ரையன் ஹிண்டனை என் கவுண்டர் செய்த காவலர், அவர் தம்மை நோக்கி துப்பாக்கியை குறி வைத்ததாகவும், தற்காப்புக்காக தாம் அவரை சுட்டதாகவும் கூறியதாக, சின் சினாட்டி காவல் முதன்மை அதிகாரி தெரஸா தீட்ஜ் கூறினார். ஆனால், மங்கலான அந்த வீடியோ பதிவில் ரையன் ஹிண்டன் காவலரை நோக்கி சுட்டதாக தெரியவில்லை என்றும் கூறினார்.
மகனை என்கவுன்ட்டர் செய்த அதிகாரியை தந்தை ஒருவர் கொலை செய்திருப்பது காவல்துறை வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.

Trending Articles