விபத்து போல தோன்றிய விபரீத முடிவு

thumb_upLike
commentComments
shareShare

விபத்து போல தோன்றிய விபரீத முடிவு

பறக்கும் விமானத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக இறந்த ஸ்கைடைவர், குதிப்பதற்கு முன்பு ஒரு குறிப்பை விட்டுச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, அது “ விபத்து அல்ல; திட்டமிட்ட தற்கொலை” என்று தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் வடகிழக்கில் அமைந்த டர்ஹாம் மாவட்டத்தில், பலரும் அறிந்த ஜேட் டமரெல்லின் மறைவு அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அவர் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்த ஸ்கைடைவிங் குழுவிலும், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
32 வயதான ஜேட் டமரெல், 400க்கும் மேற்பட்ட வெற்றிகரமான ஸ்கை டைவிங்குகளை முடித்தவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் நிகழ்த்திய ஸ்கை டைவிங் சாகசத்தின் போது பாரச்சூட் திறக்காததால், மேலிருந்து தரையில் மோதி விழுந்து இறந்தார்.
முதலில் வந்த அறிக்கைகள் இந்த சம்பவம் ஒரு பயங்கர சோக விபத்து என்று தெரிவித்தாலும், அவரது ஸ்கைடைவிங் கிளப் இது ” திட்டமிட்ட தற்கொலை” என்று வெளிப்படுத்தியது. காவல்துறையினர் அளித்த தகவலின் படி, ஜேட் டமரெல்லின் தற்கொலை நோக்கத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஜேடின் நண்பர் கூறினார்: "இது ஒரு விபத்து அல்ல. அவள் தற்கொலை நோக்கத்துடன் தான் தனது பாராசூட்டைத் திறக்காமல் கீழே விழுந்தாள்."

அவர் இணைந்திருந்த ஸ்கை ஹை ஸ்கைடைவிங் க்ளப், ”இழக்கக் கூடாத ஒரு உறுப்பினரை இழந்து விட்டோம்” என்று இரங்கல் தெரிவித்தது.

குறிப்பெழுதி வைத்து விட்டு, தற்கொலையை விபத்து போல காட்டிய இளம் பெண்ணின் மரணத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close