'நீ சிங்கம் தான்'.. விராத் கோஹ்லிக்கு புகழாரம் சூட்டிய நடிகர் சிம்பு..!

நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் 'நீ சிங்கம் தான்’ என விராத் கோஹ்லிக்கு புகழாரம் சூட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விராத் கோலி இடம் பெற்றுள்ள பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இடம்பெற்று சாதனை செய்துள்ளது. அனேகமாக பெங்களூர் அணி தான் இந்த முறை கோப்பையை வெல்லும் என்று பலரும் கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விராத் கோஹ்லி அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் ’பத்து தல’ படத்துல இடம்பெற்ற ’நீ சிங்கம் தான்’ என்ற பாடல் என்றும் அந்த பாடலை அடிக்கடி விரும்பி கேட்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை ஆர்சிபி அணி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள், விராட் கோலிக்கு பிடித்த பாடல் ’நீ சிங்கம் தான்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவுக்கு கமெண்ட் செய்த நடிகர் சிம்பு, ‘நீ சிங்கம்தான் என்று கூறி விராத் கோஹ்லியின் எக்ஸ் ஐடியை டேக் செய்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Trending Articles