இதெல்லாம் ரொம்ப தப்பு.. விராத் கோலியை விமர்சனம் செய்தவர்களுக்கு '96' நடிகை பதிலடி..!

சமூக வலைதளங்களில் விராட் கோலியை விமர்சித்தவர்களை இது மிகவும் தவறு என்று விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ‘96’ படத்தில் நடித்த நடிகை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில், அதில் சென்னை அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். இந்த சூழலில், சிலர் விராட் கோலியை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டனர்.

இந்த பதிவுகளுக்கு ‘96’ படத்தில் நடித்த நடிகை வர்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"ஒரு வீரரை புகழ வேண்டும் என்பதற்காக இன்னொரு வீரரை நாம் அவமதிக்க கூடாது. நம் நாட்டை பிரதிநிதிப்படுத்தும் வீரர்களை அவமானம் செய்வது மிகவும் தவறு. அவர்கள் இந்திய அணியின் வீரர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. விளையாட்டு என்பது சகோதரத்துவத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கொண்ட பல கருத்துகள் கமெண்ட்களாக பதிவாகி வருகின்றன.

Trending Articles