லிபிய கடற்கரையில் ஆறு புலம்பெயர்ந்தோர் சடலமாக மீட்பு..

thumb_upLike
commentComments
shareShare

லிபிய கடற்கரையில் ஆறு புலம்பெயர்ந்தோர் சடலமாக மீட்பு..

லிபியாவின் மிஸ்ராட்டா நகருக்கு அருகே கடற்கரையில் குறைந்தது ஆறு புலம்பெயர்ந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக, இஸ்லாமிய மனிதநேய அமைப்பான செம்பிறை அமைப்பைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஒருவர் தெரிவித்தார்.

2011 இல் நேட்டோவின் ஆதவுடன் நடந்த ஆதரவு கிளர்ச்சியில் தலைவர் முஅம்மர் கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாலைவனத்தின் ஊடாகவும், மற்றும் மத்தியதரைக் கடல் வழியாகவும் ஆபத்துகளைப் பொருட் படுத்தாமல், கலகத்திற்கும், வறுமைக்கும் பயந்து, ஐரோப்பாவுக்கு தப்பிச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கான போக்குவரத்து பாதையாக லிபியா மாறியுள்ளது.

வாழ வேண்டும் என்ற ஆவலில் ஆபத்துகளைப் பாராமல் தப்பிச் செல்லும் இவர்களை மரணம் விடுவதாக இல்லை. சென்ற வியாழக்கிழமை காலை நான்கு உடல்களும், வியாழக்கிழமை பிற்பகல் மேலும் இரண்டு உடல்களும் மீட்கப்பட்டதாக மிஸ்ராட்டாவின் செம்பிறை கிளையின் மீட்புத் துறையின் தலைவர் மக்லூஃப் கரீம் தெரிவித்தார்.

திரிப்போலிக்கு கிழக்கே 200 கி. மீ (125 மைல்) தொலைவில் உள்ள மிஸ்ராட்டா நகருக்கு அருகிலுள்ள கடற்கரையில் மேலும் உடல்கள் கரையேற வாய்ப்பிருப்பதால் தொடந்து ரோந்து செய்யப்படுவதாக கரீம் கூறினார்.

கடந்த பிப்ரவரியில், லிபிய பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மொத்தமாக புதைந்திருந்த டஜன் கணக்கான உடல்களை மீட்டனர்.

பஞ்சமும், கலகமும் பயமுறுத்தும் நிலையில், பிழைக்கும் வழி தேடி வரும் புலம் பெயர்ந்தோரை இந்த நாட்டின் எண்ணெய் அடிப்படையிலான பொருளாதாரம் ஈர்ப்பதால் ஆபத்துகளைப் பொருட்படுத்தாமல் புறப்பட்டு வந்து மரணத்தைத் தழுவுவது வேதனை மிக்க உண்மை.

Trending Articles
NewsGlitz in Social Media
Share to your pages!
Close