பாரம்பரியமும் தொன்மையும் வரலாற்றுச் செழுமையும் மிக்க தமிழ் மொழியும் தமிழ் மன்னர்களின் வரலாறும் இந்திய பாடத் திட்டங்களில் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பதாக நடிகர் மாதவன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் .
மும்பையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாதவன் ‘தான் பள்ளியில் படித்த காலத்தில் மொகலாயர்களின் வரலாற்றைப் பற்றி எட்டு பாடங்களும் ஹரப்பா மொகஞ்சதாரோ பற்றி இரண்டு அத்தியாயங்களும், ஆங்கில ஆட்சி சுதந்திரப்போர் பற்றி சில அத்தியாயங்களும் தென்னக மன்னர்கள் பற்றி ஒரே ஒரு அத்தியாயமும் மட்டுமே இருந்ததாகவும் எண்ணூறு ஆண்டுகள் மட்டுமே பழமையான மொகலாய மற்றும் ஆங்கிலேய ஆட்சிகளை விட தொன்மையான இரண்டாயிரத்து ஐனூறு ஆண்டுகள் பழமையான சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டதாகவும்.. கடல் பயணங்களிலும் கப்பற்படைகளிலும் முன்னோடிகளாக இருந்த தமிழர்களின் வரலாற்றுக்கு பாடப்புத்தகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதும் உலகின் மூத்த மொழியான தமிழின் சிறப்பு யாருக்கும் தெரியவில்லை என்றும் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.