பீகார் மாநிலத்தின் மொகாமா மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியொன்றில் இலவச மதிய உணவு உண்ட நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் மயங்கி விழுந்ததையடுத்து அவர்கள் அனைவரும் அருகேயுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டிருக்கின்றனர்.
மாணவர்களுக்கு வழங்குவதற்காக உணவு சமைக்கும்போது, கொதிக்கும் உணவில் விழுந்த விஷப்பாம்பை அங்கிருந்தோர் கவனிக்க தவறியதே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணைய விசாரணையின் போதே உணவோடு சேர்த்து பாம்பும் சமைக்கப்பட்ட விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. பீகாரில் கடந்த 2013 ஆம் ஆண்டும் இதே போன்று ஒரு பள்ளியில் மதிய உணவில் பாம்பு விழுந்து இருபத்தி மூன்று மாணவர்கள் உயிரிழந்தது இந்த தருணத்தில் நினைவுகூரத்தக்கது என்ற போதிலும் இந்த முறை உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதே மனதிற்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்
மதிய உணவில் பாம்பு ..
schedulePublished May 2nd 25
thumb_upLike
commentComments
shareShare
schedulePublished May 2nd 25