பெண் உரிமைகளுக்கு எதிராக பங்ளாதேஷில் வலுக்கும் போராட்டம்.

பெண் உரிமைகளுக்கு எதிராக பங்ளாதேஷில் வலுக்கும் போராட்டம்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது, தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை எதிர்த்து ஒரு இஸ்லாமியக் குழுவை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.
ஹிஃபஸாட்-இ-இஸ்லாம் குழுவின் தலைவர்கள் இது பற்றி கூறுகையில், பரிந்துரைக்கப்பட்ட இந்த சட்ட மாற்றங்கள் ஷரியாவிதிகளுக்குப் புறம்பானது என்றனர். டாக்கா பல்கலைகழகத்தின் அருகில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில் கட்டப்பட்டிருந்த பேனர்களிலும், அவர்கள் கைகளில் வைத்திருந்த பதாகைகளிலும், “ மேற்கத்தியச் சட்டங்கள் நமது பெண்களுக்குத் தேவையில்லை. பங்களாதேஷே! விழித்தெழு!” என்றுஎழுதப்பட்டிருந்தது.
தங்கள் கோரிக்கைகளை அரசுஏற்றுக் கொள்ளாவிட்டால் மே 23 அன்றுநாடுத ழுவிய போராட்டம் நடைபெறும் என்று இந்த குழு எச்சரித்துள்ளது.
இந்த குழுவின் தலைவரான மாமுனுல்ஹக், ’அரசின் சட்ட திருத்தகுழு கலைக்கப்படவேண்டும் என்றும் இத்தகைய சட்டமாற்றத்தைப் பரிந்துரைத்த குழு உறுப்பினர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும்’என்றார். ”பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்படாததற்கு , மதத்தின் சொத்துரிமைச் சட்டமே காரணம் என்று சொல்வதன்மூலம், சட்டதிருத்தக் குழு ‘நாட்டின் பெரும்பான்மை சமுதாயமக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகவும் அவர் சொன்னார்.
நோபல் பரிசு பெற்ற முகமது புனஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனா தலைமையிலான அவாமிலீக் கட்சியைத் தடைசெய்யவேண்டும் என்றும் அக்குழுவின் தலைவர்கள் கோரினர். ஹசீனாவின் 15 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த கலகத்தின் போது, நூற்றுக் கணக்கானமாணவர்களையும் மற்றவர்களையும் கொன்றதாக ஹசீனாவின் எதிரிகள் அவரது அரசாங்கத்தின் மீதுகுற்றம்சாட்டுகின்றனர். ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் இந்தியாற்கு நாடு கடத்தப் பட்டது குறிப்பிடத் தக்கது.
ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, வங்க தேசத்தில்உள்ள இஸ்லாமியக் குழுக்கள் வெளிப்படையாக செயல்படுவதுடன், சிறுபான்மை மக்கள் மிரட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த கலகத்தின் போது, நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மற்றவர்களையும் கொன்றதாக ஹசீனாவின் எதிரிகள் அவரது அரசாங்கத்தின் மீதுகுற்றம்சாட்டுகின்றனர். ஹசீனா பதவிநீக்கம் செய்யப்பட்ட பின் இந்தியாற்கு நாடு கடத்தப் பட்டது குறிப்பிடத் தக்கது.
ஹசீனா பதவிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமியக் குழுக்கள் வெளிப்படையாக செயல்படுவதுடன், சிறுபான்மைமக்கள் மிரட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
 

Trending Articles