பழைய மீன்சந்தையில் கிடைத்த பழங்கால கப்பல் !

பழைய மீன்சந்தையில் கிடைத்த பழங்கால கப்பல் !

வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள பார்ஸிலோனாவில் பயன்பாட்டிலில்லாத பழைய மீன் சந்தை ஒன்றை புதைபொருளாய்வு செய்ததில் 500 வருடங்களுக்கு முன் கடலில் முழ்கிய கப்பல் ஒன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
15 அல்லது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரிய கப்பலின் ஒரு பகுதியை ஒரு புதைபொருள் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது. 10 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் உள்ள கப்பலின் ஒரு பெரிய பகுதியும் சேதமடையாத முப்பதுக்கும் மேற்பட்ட வளைந்த மர சட்டங்களுடன் கடல்மட்டத்திற்குக் கீழே ஐந்து மீட்டர் ஆழத்தில் கிடைத்துள்ளது.

“இது ரொம்ப முக்கியமான கண்டுபிடிப்பு. பொதுவாக, கடலுக்கடியில் இருக்க வேண்டிய பொருட்கள் நிலத்தில் புதைப் பொருள் ஆராய்ச்சியில் கிடைப்பது அபூர்வம். இந்த முகப்பு, மரத்துண்டுகள், போன்றவற்றை நாங்கள் ஆய்வுக்குள்ளாக்கினால், ஏராளமான தகவல்கள் கிடைக்கலாம்” என்றார், அகழ்வாராய்வுக் குழுவின் தலைவரான பலாஷியோஸ் நீட்டோ, (30).

“கட்டுமானப் பாணியைப் பார்க்கும் போது, இது மத்திய தரைக் கடல் பகுதியைச் சேர்ந்த கப்பலின் பகுதி போல தோன்றினாலும், அதில் அட்லாண்டிக் பகுதியின் தாக்கமும் இருப்பதால், பாஸ்க் நாடு அல்லது கலிஷியாவைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறோம்.” என்றும் அவர் கூறினார்.

ஈர மணல் முழுவதுமாக மூடி இருந்ததால் நல்ல நிலையில் பாதுகாக்கப் பட்ட மரத் துண்டுகள் இனி உலர்ந்து உதிர்ந்து விடாமல் இருக்க இரவும் பகலும் நீர் பாய்ச்சி அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று ஆய்வுக் குழு தெரிவித்தது.
 

Trending Articles