வியட்நாமின் ஹோ சி மின் நகரில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி அமெரிக்காவுடனான போர் முடிவடைந்த 50 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அமெரிக்காவுடனான போர் முடிவின் 50 ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் போது, ஹோ சி மின் நகரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பில் ஆயிரக்கணக் கான வியட்நாமியர்கள் கலந்து கொண்டு செங்கொடிகளை அசைத்து தேசபக்திப் பாடல்களை இசைத்து மகிழ்ந்தனர்.
1975, ஏப்ரல் 30 ஆம் தேதி நாடு ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் விதமாக நேற்று இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இன்று தான் கன்யூனிஸ்டுகளின் கையில் இருந்த வடக்கு வியட்நாம், அமெரிக்கப் படைகளின் உதவி பெற்றிருந்த தென் வியட்நாமின் தலைநகரான ஸைகோனை வீழ்த்தி அதற்கு தங்கள் தலைவரான ஹோ சி மின்னின் பெயரை சூட்டிய நாள்.
ஹோ சி மின்னின் உருவப்படத்தைத் தாங்கிய தாமரை வடிவ அமைப்பு பேரணியின் முன் வரிசையில் ஏந்தப் பட்டிருக்க, போர்விமானங்களும், ஹெலிகாப்டர்களும் செங்கொடிகள் பறக்க வானில் பறந்தன.
ஆயிரக் கணக்கான மக்கள் இரவும் பகலும் தெருக்களில் கூடி இருந்தனர். ”…இது நினைவு கூரும் நாள் மட்டுமல்ல, கொண்டாடி மகிழும் நாளும் கூட” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த பேரணியைப் பார்ப்பதற்காகவே, முழு இராணுவ சீருடையில் பல மைல்தூரம் பிரயாணம் செய்து வந்திருந்த 75 வயதான முன்னாள் இராணுவ வீரர், ட்ரான் வான் ட்ருவாங், “ தென் வியட்நாமின் விடுதலைப் போரில் பங்கு பெற்றதை எண்ணி மிகவும் பெருமைப் படுகிறேன்” என்றார்.
“…ஆனால், எல்லாம் முடிந்தாகி விட்டது. எனக்கு எங்களோடு போரிட்டவர்கள் மீது வெறுப்பு ஒன்றும் இல்லை. போரின் முடிவை எல்லாரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்றார் அவர்.
முதல்முறையாக 300 சீன வீரர்களும், லாவொஸ் மற்றும் கம்போடிய வீரர்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவுடனான போர் முடிவின் 50 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வியட்நாம்.
schedulePublished May 1st 25