நகைக் கடைக்கு வந்த கொள்ளையனை அலற விட்ட கடை உரிமையாளர்!!

 நகைக் கடைக்கு வந்த கொள்ளையனை அலற விட்ட கடை உரிமையாளர்!!

கொள்ளையடிக்க வந்த திருடன், கடை உரிமையாளரின் அதட்டலில் பயந்து தப்பியோடிய வேடிக்கைச் சம்பவம் தாய்லாந்தில் உள்ள யசோதோன் பகுதியில் நடந்துள்ளது.
முழு முக ஹெல்மெட் அணிந்த ஒரு இளைஞன், ஒரு தங்கக் கடையில் நுழைந்து “ஐந்து பாட்” கொடுங்கள்” என்கிறார். கடையின் உரிமையா ளரான பெண், ஐந்து பாட் நாணயத்தை எடுத்து கொடுக்கிறார். ”ஐந்து பாட்”எடையுள்ள தங்கத்தைக் கேட்ட கொள்ளையன், கோபத்துடன் பேச, வார்த்தை பரிமாற்றம் கடுமையாகிறது. சட்’டென்று கொள்ளையன் பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து நீட்ட, கடை உரிமையாளரான அந்த பெண்ணின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ”துப்பாக்கியை கீழே போடு” என்ற துணிச்சலான அவரது அதட்டலைக் கேட்ட திருடன் பயந்து தலை தெறிக்க ஓடும் காட்சிகள் சிசிடிவியில் தெளிவாக பதிவாகி உள்ளன.

அந்த கொள்ளையன் பெயர் யோத்தனா, வயது 29. கடை உரிமையா ளரான சுகன்யா ஏப்ரல் 28 அன்று நடந்த அந்த சம்பவத்தின் போது தான் பயப்படவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார். கொள்ளையடிக்க வந்த இடத்தில், அதட்டலுக்குப் பயந்து துப்பாக்கி யையும் இயக்காமல், கொள்ளையும் அடிக்காமல், மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிய யோத்தனா, இன்று முக்தஹானில் பிடிபட்டார்.
சுகன்யாவும், அவருடன் இருந்த உறவினரும், யோத்தனாவின் துப்பாக்கி “லோட்” செய்யப் பட்டிருக்கலாம் என்று என்று சந்தேகித்தனர் (அது உண்மையில் காலியாக இருந்தது. இருப்பினும் அவரது பாக்கெட்டில் ஒரு சுற்று வெடிமருந்துகள் இருந்தன).
"கடைஉரிமையாளர் அதட்டிய போது நான் மிகவும் பயந்துவிட்டேன். துப்பாக்கி கிட்டத்தட்ட என் கையிலிருந்து நழுவியே விட்டது “ என்று யோத்தனா கூறினார். தனது சொந்த ஊரான ரோய் எட் நகருக்கு தப்பிச் சென்று துப்பாக்கியை உறவினர் வீட்டில் போட்டுவிட்டு, முக்தஹான் வழியாக, எல்லையைத் தாண்டி அண்டை நாட்டுக்குச் சென்று விடலாம் என்றிருந்த போது, அவர் காவல்த் துறையினரால் கைது செய்யப் பட்டார்.
முவாங் பகுதியில் ஒரு புதரில் ஒளித்திருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து குற்ற புனரமைப்புக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரும் சுகன்யாவும் மீண்டும் சந்தித்தனர். ஊடகங்களில் "பயந்தாங்கொள்ளி திருடன்” என பரிகசிக்கப் பட்ட யோத்தானா, 10 ஆண்டுகளுக்கு முன்பு 3,000 பாட்’டுக்கு துப்பாக்கியை வாங்கியதாகக் கூறினார். போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி தொடர்பான குற்றங்களின் வரலாறு தனக்கு இருப்பதாக ஒப்புக் கொண்ட அவர் வாங்கிய கடன்களை அடைப்பதற்காக, மன அழுத்தத்தில் கொள்ளை யடிக்கத் துணிந்ததாக ஒப்புக் கொண்டார். இவர் மீது கொள்ளை முயற்சி மற்றும் துப்பாக்கிச் சூடு குற்றங்கள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

Trending Articles