ஜப்பான் தலை நகர் டோக்கியோவின் யாஷியோ பகுதியில் கடந்த ஜனவரி 18 ஆம் தேதி எழுபத்தி நான்கு வயது டிரக் டிரைவர் ஒருவர் தன் வாகனத்தில் போய்க் கொண்டிருந்தபோது சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் டிரக்குடன் விழுந்தார்.
பள்ளம் ஏற்பட்ட பகுதியின் கீழ் பாதாள சாக்கடை ஓடிக் கொண்டிருந்ததால் பதினாறு அடி பள்ளத்தில் விழுந்த டிரக்கிலிருந்த டிரைவரின் சடலம் சாக்கடை சகதிக்குள் சுமார் நூற்று முப்பது அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
ஒரு சுரங்கம் போன்ற பகுதியில் டிரக் சிக்கியிருந்ததாலும் கழிவு நீர் வரத்து அதிகமாக இருந்ததாலும் பாதாளச் சாக்கடையில் சிக்கிக்கொண்ட டிரக்கையும் டிரைவரின் சடலத்தையும் மீட்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் அபாயம் இருந்ததால் மீட்புக் குழுவினர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருந்தது. இந்த பகுதியின் பாதாளச்சாக்கடை கட்டமைப்பு அறுபத்தைந்து ஆண்டுகள் பழமையானதால் பக்கவாட்டு சுவர்கள் பலவீனமாக இருந்தன.
சாக்கடையின் நீர் வரத்தை கட்டுப்படுத்த அந்த பகுதியில் வசிக்கும் பன்னிரெண்டு லட்சம் மக்களை மீட்புப் பணி முடியும் வரைக்கும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என அரசு வேண்டுகொள் விடுக்க மக்கள் தண்ணீர் பயன் படுத்துவதை தவிர்க்க அவசர கதியில் மீட்புப் பணிகள் நடைமுறைப் படுத்தப்பட்டு பல மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் அந்த ஓட்டுனரின் சடலம் மீட்கப்பட்து.
நவீன தொழில் நுட்பத்திற்கு பெயர்பெற்ற ஜப்பானின் தலை நகரிலேயே சாலை பள்ளத்தில் விழுந்த ஒரு ஓட்டுனரின் சடலத்தை மூன்று மாத காலமாக மீட்க முடியவில்லை என்பது நமக்கு வியப்பை ஏற்படுத்தும் செய்தியாகும்.
டோக்கியோவில் சாலை பள்ளத்தில் விழுந்த ஓட்டுனரின் சடலம் மூன்று மாத முயற்சிக்குப் பின் மீட்பு...
schedulePublished May 3rd 25