மதப்பிரச்சாரம் செய்தவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் விதித்த சிங்கப்பூர்

thumb_upLike
commentComments
shareShare

மதப்பிரச்சாரம் செய்தவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் விதித்த சிங்கப்பூர்

பல்லின மக்களும் ஒன்றிணைந்து வாழும் சிங்கப்பூரில் பொது இடங்களில் அனுமதியின்றி மத பிரச்சாரங்கள் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த நிலையில் ஜுராங் பகுதியில் 59 வயதான பெஹ் டெக் ஹோ என்பவர் பௌத்த மத பிரச்சார வாசகங்கள் அடங்கிய அட்டையை கழுத்தில் தொங்கவிட்டறு புல் தரையொன்றில் அமர்ந்திருந்தார்.
இதைப்பார்த்த காவலர்கள் அவரை விசாரித்த போது அவர் மத பிரச்சாரம் செய்ய அனுமதி எதுவும் பெறவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் வித்திதனர்.
பௌத்த மத்தினர் அதிகமாக இருந்த போதிலும் சிங்கபூர் அரசு மத விஷயங்களில் பாரபடசமின்றி நடந்து கொள்வதையே இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

NewsGlitz in Social Media
Share to your pages!
Close