ஸ்பெயினில் அடைத்து வைக்கப்பட்ட சிறுவர்கள் மீட்பு

undefined

ஸ்பெயின் நாட்டின் ஓவியோடோ நகரில் கோவிட் தொற்று காலம் முதல் தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட ஒரு தம்பதியினரிடமிருந்து வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட மூன்று குழந்தைகளை மீட்ட அதிகாரிகள், ஜெர்மன் நாட்டை சார்ந்த அந்த தம்பதியினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓவியோட்டோ நகரின் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் பள்ளிக்கூத்திற்கு அனுப்பப்படாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அண்டை வீட்டுக்காரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த வீட்டிற்கு விரைந்து வந்து சோதனை செய்த அதிகாரிகள் எட்டு வயதுடைய இரு சிறுவர்களையும் பத்து வயதுடைய ஒரு சிறுவனையும் அந்த வீட்டுக்குள் இருந்து மீட்டனர்.

ஸ்பெயினில் சமிபத்தில் மின்தடை ஏறபட்ட சூழலிலும் அந்த வீட்டில் வசிக்கும் சிறுவர்கள் வெளியாட்களின் கண்ணில் படாததாலேயே தனக்கு சந்தேகம் வலுத்ததாக கூறிய அண்டைவாசி கோவிட் காலத்தைத் தொடர்ந்து அவ்வீடு ஒரு மர்மமாளிகை போன்றே இருப்பதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்த போலிஸ் சோதனையின்போது சிறுவர்கள இரட்டை முகக்கவசம் அணிந்திருந்தாகவும் வீடு முழுக்க குப்பைகள் சூழ்ந்து துர்நாற்றம் வீசியதாகவும் அந்த பகுதியின் காவல் ஆணையர் பிரான்சிஸ்கோ ஜேவியர் லோசானோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் பல ஆண்டுகளாக வெளியுலகத்தையோ நல்ல காற்றோட்டமான சூழலையோ அனுபவிக்காததால் அவர்கள் மீட்கப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டபோது காற்றை நன்றாக உள்ளிழுத்து சுவாசித்ததாகவும் வெளியே வாசலில் இருந்த புற்களை ஆர்வத்தோடு தொட்டு பார்த்ததாகவும் உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது ஜெர்மனை சார்ந்த இந்த தம்பதியினர் எதற்காக ஜெர்மனை விட்டு ஸ்பெயினில் குடியேறியுள்ளனர் என்ற ரீதியிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Trending Articles