நடிகை ஜெயசித்ரா மாட்டுக்கார வேலன் படத்தில்தான் முதன்முதலாக அறிமுகமானார். நாயகி, குணச்சித்திர நடிகை என தமிழிலும், தெலுங்கிலும் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். தமிழக அரசால் கலைமாமணி விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டவர்.
இங்க எல்லாரும் உஷாரா இருந்துட்டங்க.. நீங்க ஏன் அம்மா உஷாரா இல்லாம போயிட்டீங்க . உங்க வாழ்க்கைத்துணையா குடியை ஏன் தேர்ந்தெடுத்தீங்க" என நடிகையர் திலகம் சாவித்ரியிடம் கேள்வி கேட்டுள்ளார் கலைமாமணி நடிகை ஜெயசித்ரா.
கலைமாமணி நடிகை ஜெயசித்ரா indiaglitz classic நேயர்களுக்கு அளித்த பேட்டியில் நடிகையர் திலகம் சாவித்ரி குறித்தும், நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த சாவித்ரி பயோ பிக் படம் குறித்தும் பேசியுள்ளார்.
அந்த பேட்டியில் ,
" சாவித்ரி அம்மானா நடிகையர் திலகம், அழகு, நடிப்பு, டயலாக் டிக்ஷன்னு சொல்லிகிட்டே போகலாம்.
பாசமலர் படத்துல தங்கையா நடிச்சிருப்பாங்க. அதில மலர்ந்தும் மலராத பாடல்ல ஒரு ஸீன்ல கண்ணீர் வரும் Glycerin இல்லாம பண்ணிருப்பாங்க.
கந்தன் கருணை படத்துல, சொல்ல சொல்ல இனிக்குதடா பாடல் நீங்க பாடுறீங்களா இல்ல ஜானகி அம்மா பாடுறாங்களாங்குற சந்தேகம் வரும்.
சரஸ்வதி சபதத்துல சரஸ்வதியாவே நடிச்சிருப்பங்க.
சாவித்ரி அம்மா சொல்லிதா, இந்த படத்தை டைரக்டர் எடுத்துருக்கார். இந்த படத்துல சாவித்ரி அம்மாவா கீர்த்தி சுரேஷ் நடிச்சிருக்காங்க. அந்த பொண்ணு சாவித்ரி அம்மா பேரை காப்பாத்தும். படத்துல ரெண்டு இடத்துல அப்டியே சாவித்ரி அம்மாவை பார்த்ததுபோல் இருந்துது.
இங்க எல்லாரும் உஷாரா இருந்துட்டங்க.. நீங்க ஏன் அம்மா உஷாரா இல்லாம போயிட்டீங்க . உங்க வாழ்க்கைத்துணையா குடியை ஏன் தேர்ந்தெடுத்தீங்க. நீங்க ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்துருக்கலாம். நீங்க தன்னந் தனியா இருந்துட்டீங்க . உங்க வாழ்க்கைதான் இங்க பலருக்கு உதாரணமா இருந்திருக்கு.
படம் பார்த்து இரண்டுநாள் எனக்கு அந்த தாக்கம் இருந்தது. இப்போ நிம்மதியா இருக்கேன். நான் உங்ககிட்ட இப்போ பேசிட்டுதான் இருக்கேன் அம்மா.
சாவித்ரி அம்மா வாழ்க்கைல நடந்ததா, படமா எடுத்திருக்காங்க.
என இந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.