சுகாதாரமற்ற சானிடரி நாப்கினால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து!

சுகாதாரமற்ற சானிடரி நாப்கினால் ஏற்படும் புற்றுநோய் ஆபத்து!

 

பெண்கள் தங்கள் வாழ்வில் மாதம்தோறும் எதிர்கொள்ளும் வலிகளில் ஒன்று தான் மாதவிடாய்.ஒவ்வொரு மாதமும் வீட்டில் வாங்கும் மளிகை வரிசையில் அத்தியாவசிய பொருளாக நாப்கின் நிச்சயம் இருக்கும்.ஆனால் அப்படி வாங்கும் நாப்கின் உண்மையிலே சுகாதாரத்துடன் தான் இருக்கிறதா ?என யாரும் யோசிப்பதோ ஆராய்வதோ இல்லை.அதை பற்றிய விழுப்புணர்வை இப்பதிவில் காண்போம்.

பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் மொத்தமாக 10,000 முதல் 18,000 வரை நாப்கின்களை பயன்படுத்துகின்றனர்.மாதவிடாய் நேரத்தில் நாம் வாங்கும் நாப்கின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?அதில் என்னென்ன சேர்க்கப்படுகிறது?என்பதே யாருக்கும் தெரிவதில்லை.இந்த மாதிரியான சுகாதாரமற்ற நாப்கினை நாம் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம்.

1.ஆண் மற்றும் பெண் இருவருக்குமே பிறப்புறுப்பில் ஏற்படும் புற்றுநோய்.
2.மலட்டுத்தன்மை .
3.இதை நுகரும் பிராணிகளுக்கு ஏற்படும் வித்தியாசமான நோய்கள்.
4.சாதரணமாக ஏற்படும் இரத்தப்போக்கை விட அதிகமான இரத்தப்போக்கு.
5.கருப்பை கோளாறு.

அதுமட்டுமில்லாமல் தலைவலி,தீராத காய்ச்சல்,உடல் உபாதைகள்,தோல் தொடர்பான நோய்களும் ஏற்படுத்துகிறது.மேலும் பசியின்மை,இரத்த அழுத்தம்,பக்கவாதம்,மூளை தொடர்பான நோய்களையும் ஏற்படுத்துகின்றன.

இது தொடர்பாக பெண்கள் அதிகமான ஆபத்தை சந்தித்து வருகின்றனர்.கர்பப்பைவாய் புற்றுநோய் ஏற்படவும் இந்த நாப்கினே அதிக காரணமாக இருக்கின்றன.

இந்தியாயாவில் தயாரிக்கப்படும் நாப்கினில் அதிகபட்சமாக ரசாயனம் கலப்பதாகவும் இதனால் பெண்களுக்கு உடல் உபாதை உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் சமீபத்தில் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளன.

முடிந்த அளவுக்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின் மற்றும் டயப்பர் காட்டனாக இருப்பது நல்லது என உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Trending Articles