சௌகார் ஜானகி தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை. 1931 ல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் பிறந்தவர். நாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் 300 க்கும் மேற்பட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்தவர். ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியவர்களுடன் திரையில் தோன்றியவர்.
உயர்ந்த உள்ளம், படிக்காத மேதை, இருகோடுகள், நீர்க்குமிழி, எதிர்நீச்சல் மற்றும் தில்லு முல்லு ஆகிய படங்கள் என்றென்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்கள் ஆகும். எண்ணற்ற திரைப்பட விருதுகளை பெற்றவர் என்ற சிறப்புக்குரியவர் நடிகை சௌகார் ஜானகியாவார்.
" ஜெமினியால்தான் சாவித்ரி வாழ்க்கை சீரழிந்தது என்பது உண்மை இல்லை , சாவித்ரி பயோ பிக் படம் முழுக்க முழுக்க எதிர்மறையை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். அரசியல்வாதிகளின் Bio பிக் எடுத்தால் நாறிவிடும்" என Y .G மஹேந்திரன் உடனான நேர்காணலில் நடிகை சௌகார் ஜானாகி பேசியுள்ளார்.
மேலும் அந்த பேட்டியில் அவர் பேசியதாவது:-
" ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்ட பட்டிருக்கேன். என் பசங்களுக்கு பால் வாங்கிக்குடுக்க காசு இருக்காது. ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட் ல பசியில மயங்கிவிழுந்துட்டேன். எவ்வளவோ கஷ்டங்கள் பார்த்துட்டேன்.
எனக்கு பயோ பிக் படம் எடுக்குறதுல உடன்பாடில்லை. சாவித்ரிங்கிற மகா நடிகையின் positive பக்கங்களை எடுக்காமல் ஏன் நெகடிவ் எடுத்து அவங்களை சிறுமை படுத்தனும். என்னை வைத்து bio பிக் எடுக்க ஒன்றும் இல்லை.
என்னிடம் சாவித்ரியின் பயோ பிக் பார்க்க சொன்னாங்க, நான் பார்க்க விரும்பவில்லை. எனக்கு சாவித்ரியை பற்றி நன்கு தெரியும். எனக்குப்பின் சினிமாவுக்கு வந்தவர்.அந்த படத்தில் உண்மையை காட்டவில்லை. அவர்கள் காசு பார்க்க ஏன் சாவித்ரியை பயன்படுத்த வேண்டும்.
ஜெமினியால்தான் சாவித்ரி வாழ்க்கை கெட்டது என்று சொல்வதில் உண்மை இல்லை. ஜெமினி is a Gentle Man .
எம். ஆர். ராதா என்ன மாறி மனுஷன். அவரோட குரல், பாவனை எல்லாம் பார்த்து பயந்துட்டேன் ஆனால் He is a great actor. நல்ல இடத்து சம்பந்தம் திரைப்பட ஷூட்டிங்ல என் கால்ல கன்னாடி குத்தி இரத்தம் வழியிறத தூரக்க உட்கார்ந்திருந்த எம். ஆர். ராதா பார்த்துட்டார். அங்கிருந்து கத்திகிட்டே வந்து முதல் உதவி பெட்டியை கொண்டுவரச்சொல்லி என் கால அவரே சுத்தம் பண்ணினார்.
இந்த mee too விஷயம் ரொம்ப மோசமானது. இலை மறை காயாக சிலது இருந்தாதான் வாழ்க்கை நல்லா இருக்கும். இப்படி பொதுவெளியில் வந்து எப்பவோ நடந்ததை அல்லது நடந்தது போல் உள்ளதை சொல்வது சரியல்ல. நான் ஒரு பெண்ணியவாதி, ஆனால் இந்த mee too வை என்னால் ஏற்கமுடியாது.
கலைஞர் வசனத்தை நான் பேசி நடித்திருக்கிறேன். கலைஞர் என்னை பாராட்டத் தவறியதே இல்லை.
ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என இருவருடனும் நடித்துள்ளேன். ஒளிவிளக்கு பட ஷூட்டிங் முடிந்தவுடன், அவர் என்னை பார்த்து சொன்ன வார்த்தை " நீங்க பண்பட்ட நடிகை அம்மா " னு சொன்னார்.
இன்னும் பல சுவாரஷ்யமான விஷயங்களை பேசியுள்ளார்.