ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தாலிபான்கள் சதுரங்க விளையாட்டு சூதாட்ட தன்மைகளோடு இருப்பதாகவும் சூதாட்டம் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரானது என்பதாலும் அது குறித்த சந்தேகங்கள் தீரும் வரைக்கும் சதுரங்க விளையாட்டு ஆப்கானில் தடை செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
ய்தௌ க்வும் ஒலோஒடு ண்ட்னி
கிஆபாடி த்தை saஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் அரசாங்கம், சதுரங்க விளையாட்டு சூதாட்டத்திற்கு ஒரு ஆதாரமாக இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை சதுரங்கத்தை தடை செய்துள்ளது.
ஆகஸ்ட் 2021 ல் தாலிபான்கள் ஆப்கானின் அதிகாரத்தை பிடித்தது முதல் மத ரீதியான கடுமையான கோட்பாடுகளை கடிபிடிக்க ஆரம்பித்தனர், பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுப்பதை தடை செய்த அவர்கள் இப்போது புத்தியை கூர்மையாக்கும் விளையாட்டு என உலகமே கொண்டாடும் சதுரங்க விளையாட்டுக்கு தடை விதித்திருப்பது அவர்கள் தஙகள் அடிப்படைவாதக் கொள்கைகளிலிருந்து துளியும் விலகவில்லை என்பதையேக் காட்டுவதாக விமர்சங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து விளக்கமளித்துள்ள தாலிபான்களின் விளையாட்டு துறையின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி, இஸ்லாமிய ஷரியா சட்டத்தில் சதுரங்கம் சூதாட்டத்திற்கான ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது "இந்த பரிசீலனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டு நிறுத்தி வைக்கப்படுகிறது."
சதுரங்க விளையாட்டை சூதாட்ட லிஸ்ட்டில் சேர்த்த தாலிபான்கள்..
schedulePublished May 13th 25