வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களை கௌரவிக்கும் வகையில் சுய சக்தி விருது அளிக்கப்படும் நிலையில் இந்த விருதுக்கு விண்ணப்பம் தரலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெண்கள் பலர் தங்களது வீடுகளில் இருந்து சிறிய அல்லது நடுத்தர அளவில் வணிகம் செய்து வருமானம் ஈட்டி வரும் நிலையில் அந்த பெண்கள் சுய சக்தி உடையவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
வீட்டில் இருந்து தொழில் செய்து வரும் பலதரப்பட்ட பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சுய சக்தி விருது அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேக் செய்வது முதல் பாடம் கற்பிப்பது வரை பல்வேறு தொழில்கள் வீட்டில் இருந்தே பெண்கள் செய்து வருகின்றனர் என்ற நிலையில் இது போன்ற எந்த தொழில் செய்தாலும் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் என்பதால் அவர்கள் இந்த விருதுக்காக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த பிரிவில் நீங்கள் வருமானம் ஈட்டுகிறீர்கள் என்பதை குறிப்பிட்டு இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்காக இதுவரை 2500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் அளிக்கப்படும்.
சுயசக்தி விருதுகள் 2024.. வீட்டில் இருந்து தொழில் செய்யும் பெண்களுக்கான கெளரவம்..!
schedulePublished Jul 22nd 24
thumb_upLike
commentComments
shareShare
schedulePublished Jul 22nd 24