குறைமாத குழந்தைகளின் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு.

குறைமாத குழந்தைகளின் பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வு.


கர்ப்பக் காலத்தில் 37 வாரங்களுக்கு முன்பே பிறக்க கூடிய குழந்தையை குறைமாத குழந்தை மற்றும் குறைப்பிரசவம் என அழைக்கப்படுகிறது.முழுமாத குழந்தை பிரசவம் என்பது 40 வாரங்கள் ஆகும்.முன்கூட்டிய பிரசவத்தின் அறிகுறிகள் என்பது கருப்பை சுருக்கம்,யோனியிலிருந்து திரவம் கசிவு போன்றவையாகும்.

குறைமாத குழைந்தைகள் பிறப்பதற்கான அடிப்படை காரணங்கள்:

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் அக்குழந்தை எடை குறைவான குழந்தை,பெண்கள் மிக சிறிய வயதில் திருமணம் செய்தால்,தாய்க்கு நீண்ட கால பாதிப்பான இதய நோய்,சிறுநீரக நோய் மேலும் பொருளாதார நிலையில் பின்தங்கி இருந்தாலும் அல்லது அதிக எடை மற்றும் உயரம்,கர்ப்ப காலத்தில் அதிகமா இரத்த போக்கு,அதிகமான அனாவசிய வேலை,மன உளைச்சல் போன்ற பல காரணங்களினால் குறை மாத குழந்தைகள் பிறக்கின்றன.

முன்கூட்டிய பிரசவத்திற்கான காரணிகள்:

1.கர்பத்தின்போது அதிக எடை அல்லது குறைவான எடை.
2.உளவியல் ரீதியான மன அழுத்தம்.
3.கர்ப்ப காலத்தில் மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல்,போதை பொருளுக்கு அடிமையாகி இருத்தல்.
4.இரட்டை அல்லது பல கர்ப்பம்.
5.நீரிழிவு நோய்,பிறப்புறுப்பு நோய் தொற்றுகள்,அதிக இரத்த அழுத்தம்,
6.மகப்பேறு சமயத்தின் கவனிப்பில் குறைபாடு.
7.குழந்தையின் பிறப்பு குறைபாடுகள்.

குறைப்பிரசவத்தின் போது கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள்:

1.முதுகு வலி,உங்கள் நிலையை மாற்றும்போது ஏற்படும் வலிகள்.
2.யோனியிலிருந்து கசியும் திரவம்.
3.அடிவயிற்று வயிறு வலி
4.மாதவிடாய் போன்ற இரத்த போக்கு.

முன்கூட்டியே பிறக்கும் குழந்தையின் நிலை:

உலகில் 10% குழந்தைகள் குறைமாதத்தில் பிறக்கின்றனர்.ஆனால் அவர்கள் முதிர்ந்த வயதில் ஆரோக்கியமாக இருக்கின்றனர்.இந்த மாதிரியான முழு மாதம் இல்லாமல் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி மெதுவாக உள்ளது.பெருமூளை வாதம்,அறிவுசார் குறைபாடு,செவித்திறன் குறைபாடு,
உடல் நல பிரச்சனைகள் போன்ற ஆபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த மாதிரியான குறை மாதத்தில் பிறக்கும் குழந்தையை எப்படி பராமரிப்பது:

நுரையீரல்,செரிமான அமைப்பு,நோயெதிர்ப்பு அமைப்பு போன்றவை சரியாக வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் இது போன்ற குறை மாதத்தில் பிறந்த குழந்தையின் மீது இன்னும் அதிகமான கவனம் தேவை.அந்த குழந்தை இயல்பான நிலைக்கு வரும் வரை அதனை மேலும் அதிக பராமரிப்போடு வைத்து கொள்வது சிறந்தது.
 

Trending Articles