"எங்கப்பாவை போலவே என் கணவர் மு.க. முத்து ரொம்ப அழகா பாடுவாரு" - சிவகாமிசுந்தரி பெருமிதம்

thumb_upLike
commentComments
shareShare

பின்னணி பாடகர் இசை சித்தர் சி.எஸ். ஜெயராமன் அவர்களின் மகளும், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் மகன் மு.க. முத்துவின் மனைவியுமான சிவகாமிசுந்தரி அவர்கள் INDIAGLITZ-க்கு அளித்த பேட்டியில், "எனது தந்தை ஜெயராமன் அவர்கள் தாம் பாடும் பாடல்களுக்கு அவரே இசையமைத்துக் கொள்வார். ஆனால் இசையமைப்பு என்று அவர் பெயரை போட்டுக் கொள்ள மாட்டார். எனது கணவர் மு.க. முத்து அவர்கள் எனது தந்தையை போலவே மிக அழகாக பாடுவார்.

தலைவர் கலைஞர் அவர்கள் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் வந்தவுடன் எனது கணவரை எனது தந்தையை போல் பாடச் சொல்வார். அந்த சமயம் எனது கணவர் இசையமைக்காமல் பாட மாட்டார் கையில் என்ன இருக்கிறதோ அதை எடுத்து வைத்து தாளம் போட்டுக் கொண்டே பாடுவார். எனது தந்தையாருக்கு வந்த வாய்ப்புதான் தூக்குத்தூக்கி படத்தில் வந்த பாடல்கள் அச்சமயம் அவர் ரொம்ப பிசியாக இருந்ததால் TMS- ஐ அறிமுகப்படுத்தி அவரை அந்த பாடல்களை பாட வைத்து அந்த படத்தில் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல் மலேசியா வாசுதேவன், ஏ.எல். ராகவன் போன்ற போன்ற பாடகர்களையும் அறிமுகப்படுத்தினார் ஒருமுறை எனது தந்தையார் சிறுவயதாக இருக்கும் பொழுது கல்கத்தாவில் ஒரு பாடல் பதிவிற்காக சென்றிருக்கும் போது அவரை அங்கு வந்த ஒரு இளைஞர் பாராட்டினாராம். அவர் பாராட்டு சென்றவுடன் எனது தந்தையார் கேட்டாராம் யார் இவர் என்று அதற்கு அவர்கள் அவர்தான் ரவீந்திரநாத் தாகூர் என்று சொன்னார்களாம்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

 

 

 

NewsGlitz in Social Media
Share to your pages!
Close