ஒரு நியூயார்க் தொலைகாட்சி நிலையத்தில் நேற்று விசித்திரமான தலைப்புச் செய்தி வெளியானது. செய்தி வாசிப்பாளர் கூறினார்,” ”அதிகாலை 4 மணியளவில் எனக்கு பனிக்குடம் உடைந்தது. ஆனால், இன்னும் நான் மருத்துவமனை செல்ல நேரமிருப்பதால், செய்தி வாசிக்கிறேன்”.
ஆல்பனியில் WRGB-TV CBS6 என்ற தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர் ஒலிவியா ஜேக்குயித் நேற்று காலை காலை ஆறு மணி செய்தி ஒலிபரப்பின் போது இந்த செய்தியை வேடிக்கையாக தலைப்புச் செய்தி என குறிப்பிட்டார்.
அவருடன் இருந்த இன்னொரு செய்தி வாசிப்பாளர் ஜூலியா டன்,” இது நிச்சயமாகவே ப்ரேக்கிங் நியூஸ் தான் “ என்று சிரிப்புடன் குறிப்பிட்டார்.
“இது ஆரம்பக் கட்டம் தான்” என்று சொன்ன ஜேக்குயித் மருத்துவமனைக்குச் செல்லும் முன் முழு செய்தி ஒலிபரப்பையும் முடித்துவிட்டார்.
தொலைக்காட்சித் திரையின் ஓரத்தில் “ஜேக்குயித்துக்கு குறிக்கப் பட்ட நாள் கடந்து இரு நாட்களாகின்றன” என்ற அறிவிப்பும் தென்பட்டது.
செய்தியாளரும், அவர் கணவர் டின்னும்,தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக ஃபெப்ரவரி மாதத்தில் அறிவித்தனர்.
செய்தி இயக்குனரான ஸ்டோன் க்ரிஸ்ஸம் ஒலிபரப்பு முடிந்ததும், ஜேக்குயித்தை பாராட்டி ஒரு செய்தி வெளியிட்டார். அதில்:
“…அவர்களை விட நாங்கள் தாம் மிகவும் பரபரப்பாகிவிட்டோம். இந்த ஆண்டு ஜேக்குயித் தமது குழந்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டதிலிருந்து இன்று மாரத்தான் ஓடியது போல காலத்துடன் போட்டியிட்டு பணியை முடித்தது வரை இந்த பயணத்தில் தமது மென்மையையும், வலிமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று பாராட்டிய அவர், ” அவருடைய ‘செய்திகளை பகிரும் ஆர்வம், தன் சொந்த ஊர் மீதுள்ள பற்று, பணியில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு ஆகியவை யாவரும் அறிந்ததே. எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய சிறிய உறுப்பினரை வரவேற்க நாங்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார்.
பணி முடியும் வரை பிரசவம் காத்திருக்கட்டும்: அர்ப்பணிப்புள்ள செய்திவாசிப்பாளர். !
schedulePublished May 23rd 25