யாரையெல்லாம் தாக்கும் இந்த ஹீட் ஸ்ட்ரோக்?

யாரையெல்லாம் தாக்கும் இந்த ஹீட் ஸ்ட்ரோக்?


தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.இந்த அதிக வெப்பத்தின் காரணமாக மக்களுக்கு எந்த மாதிரியான உடல் பிரச்சனைகள் ஏற்படும் ?அதிலிருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம்.

கோடைகாலத்தில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி என்பதை விரிவாக காண்போம்.முடிந்த அளவிற்கு வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.அப்படியே வெளிய சென்றாலும் துணியால் தோலை மறைத்து கொள்வது நல்லது.குடை பயன்படுத்த வேண்டும்

மேலும் சருமம் வறண்டு போகாமல் பாதிப்படையாமல் இருக்க சன்ஸ்கிரீன் மற்றும் லோஷன் பயன்படுத்துவது சிறந்தது.உடலில் நீரின் அளவு குறையாமல் இருக்க அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும்.சராசரியாக ஒரு நாளைக்கு 3லிட்டர் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும்.

வெயில் அதிக அளவில் இருக்கும் நேரத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்ட்ரோக் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.இது குறிப்பாக 60 வயதிற்கு மேற்பட்ட வயதான முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.இந்த ஸ்ட்ரோக் இளைஞர்களுக்குமே போதுமான அளவு தண்ணீர் இல்லாத சமயத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

பிறகு அதீத உடற்பயிற்சியினால் கூட இவை திடீரென ஏற்படும்.நம் உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்து கொள்ள மூளையில் தெர்மோஸ்டாக் உள்ளது.அது செயலிழந்து விடும் நேரத்தில் வெப்ப அதிர்ச்சி ஏற்படுகின்றன.அப்போது உடலில் உள்ள நீர்ச்சத்து அனைத்தும் ஆவியாகி விடும்.அந்த சமயம் உடல் எதிர்வினையாற்ற நினைக்கும்போது மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும்.இவை அனைத்தும் முதியவர்களுக்கு இயல்பாகவே குறைவாக இருக்கும்.

அந்த நேரத்தில் அவர்கள் வெளியே சென்றால் வெப்ப அதிர்ச்சிக்கு ஆளாகி உயிரையே விடும் நிலை ஏற்படும்.இந்தியாயாவில் ஆண்டுக்கு 100 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கினால் இறக்கின்றனர்.இதை பற்றிய போதிய விழுப்புனர்வு மக்களிடையே இருப்பதில்லை.

எனவே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.இந்த வெயில் காலத்தில் படை,சொறி ,பூஞ்சை தொற்று போன்ற சரும உபாதைகள் ஏற்படுகின்றன.

அதனால் எப்போதும் உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்வது,சருமத்தில் வியர்க்குரு பவுடர் போடுவது,உடலின் சூட்டை தணிக்கும்படியான உணவை எடுத்து கொள்வது போன்ற முறைகளை மேற்கொள்ளலாம்.குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட தண்ணீரை பருகுவதை காட்டிலும் பானையில் நிரப்பிய தண்ணீரை பருகுவது ஆரோக்கியமானது.

மேலும் கோடைகாலத்தில் ராகி கூழ்,கம்மங்கூழ்,மோர்,தயிர் போன்றவற்றை எடுத்து கொள்வது போன்றவற்றால் இது போன்ற வெப்பத்தின் காரணமாக ஏற்படும் பக்கவாதத்தில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.

Trending Articles